For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமான் என்னைச் சாப்பிடு... புலியின் கூண்டிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சீன வாலிபர்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்ட வாலிபர் ஒருவர் மிருகக் காட்சி சாலையில் உள்ள புலியின் கூண்டிற்குள் குதித்து, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது.

சீனாவில் உள்ள செங்க்டு மிருக காட்சியகத்திற்குச் சென்ற யாங் ஜிங்காய் என்ற 27 வயது வாலிபர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த புலியின் கூண்டிற்குள் குதித்துள்ளார். வாலிபரின் இச்செயலால் அதிர்ச்சியடைந்த மற்ற பார்வையாளர்கள் அவரைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளனர்.

Man jumps into tiger enclosure at China zoo to offer himself to tigers

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மிருகக் காட்சி சாலை பாதுகாவலர்கள் யாங்கை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு கூண்டுக்குள் குதித்த யாங், புலியை ஆத்திரமூட்டும் வகையில் அதன் தாடையை பிடித்து இழுத்து, சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து புலி அவரை தாக்கத் தொடங்கியுள்ளது.

பெரும் போராட்டத்திற்குப் பிறகு மிருக காட்சி சாலைப் பாதுகாவலர்கள் யாங்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் யாங், மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு இத்தகைய தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A Chinese man suffering from depression shocked visitors at a zoo when he attempted to feed himself to a pair of Bengal tigers. Yang Jinhai, 27, climbed over the wall of the Chengdu Zoo in Sichuan province to enter into tigers enclosure on Sunday as he wanted to improve the lives of caged cats by offering them himself to eat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X