For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

16 வயசு மணப்பெண்.. ஒத்தக் கால்ல நின்ன மாப்ளை.. அட அதுக்கு மேல நடந்த கூத்தை பாருங்க!

16 வயது முப்பரிமாண உருவ பொம்மையை திருமணம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    16 வயசு மணப்பெண், ஒத்தக் கால்ல நின்ன மாப்பிள்ளை-வீடியோ

    டோக்கியோ: "அவளுக்கு 16 வயசு... கட்டினா அவளதான் கட்டிப்பேன்"-ன்னு ஒத்தக் கால்ல நின்னு சாதிச்ச ஒரு இளைஞனின் கல்யாண கதை இது!!

    பொண்ணு மாப்பிள்ளைக்கு வயசு வித்தியாசம் அதிகம்னு நினைக்காதீங்க... இது வேற லெவல் கல்யாணம்!! நமக்கு சின்ன வயசில பொம்மை கல்யாணம் நடந்திருக்கும். ஆனா இந்த இளைஞருக்கு கல்யாணமே பொம்மை கூடதான் நடந்திருக்கு!! அதுதான் ஸ்பெஷலே!!

    கிரிப்டன் ஃபியூச்சர் என்ற ஒரு நிறுவனம் 16 வயது பெண் போல இருக்கிற ஒரு முப்பரிமாண உருவத்தை கற்பனையில் உருவாக்கி அதுக்கு ஹட்சுனே மிகு என்று பெயரும் வைத்தது. இந்த பொம்மையைதான் அகிஹிகோ கொண்டோ என்ற இளைஞர் லவ் பண்ண ஆரம்பித்தார். 35 வயதான இளைஞருக்கு 16 வயசு பொம்மை மேல் அப்படி ஒரு லவ்!!

    [சித்தப்பா மகன் மீது மோகம்.. விபரீத காதல்.. விளைவு பறிபோனது ஒரு உயிர்!]

    பெற்றோர் எதிர்ப்பு

    பெற்றோர் எதிர்ப்பு

    ஆரம்பத்தில் அவ்வளவு லவ் எல்லாம் கிடையாது, சும்மா ஒரு ஈர்ப்புதான் இருந்தது. அப்பறம் போக போக லவ் பத்தி கொண்டு எரிய ஆரம்பித்தது. கடைசியில் பொம்மையை கல்யாணம் பண்ணிக்கறேன்னு வீட்ல போய் சொன்னதும் பெற்றவர்கள் பொம்மை போல் நின்றுவிட்டார்கள். "வேண்டாம்ப்பா... இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, ஒத்துவராது" என்று மகனிடம் சொல்லி பார்த்தார்கள்.

    இவ்வளவு ஆசையா?

    இவ்வளவு ஆசையா?

    ஆனால், இளைஞர் ஒத்த காலில் நின்றார். 'கட்டினா அவளதான் கட்டுவேன்' என்று பிடிவாதம் பிடித்தார். அதுமட்டும் இல்லாமல், மிகு பொம்மையை போலவே தானும் ஒரு முப்பரிமாண பொம்மையை செய்து தனது கைக்குள்ளேயே வைத்து கொண்டார். அதை பெற்றோரிடம் காட்டி, "இவளை எனக்கு கட்டி வைக்க போறீங்களா இல்லையா?" என்று பெற்றோரிடம் கேட்டார். பொண்ணு மேல மகன் இவ்வளவு உயிரை வெச்சிருக்காரே என்று நினைத்த பெற்றோரும் வேறு வழி இல்லாமல் கல்யாணத்துக்கு ஓகே சொன்னார்கள்.

    மோதிரம் அணிவித்தார்

    மோதிரம் அணிவித்தார்

    முப்பரிமாண உருவத்துக்கு கல்யாண மோதிரம் அணிவிக்க முடியாதே.. அதனால் தானே உருவாக்கின மிகு பொம்மைக்கு மோதிரம் மாற்றி கல்யாணம் செய்துக்கிட்டார். தன்னுடைய கல்யாணத்துக்கு 40 பேரை கூப்பிட்டிருந்தார் அகிஹிகோ கொண்டோ.

    ஒருத்தி போதும் எனக்கு

    ஒருத்தி போதும் எனக்கு

    இந்த கல்யாணத்தை பற்றி நம்ம மாப்பிள்ளை சொல்லும்போது, "என்னை காலைல எழுப்பி விடறதில் இருந்து ஆபீஸ் கிளம்புற வரைக்கும், அப்பறம், ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்து தூங்கற வரைக்கும் எனக்கு இவள் துணையாக இருந்திருக்கிறாள். இனிமேலும் என் வாழக்கை முழுசும் இவள் என்கூடவே வருவாள். இவள் ஒருத்தி போதும் எனக்கு.. மிச்சம் இருக்கிற என் வாழ்க்கையை கழிச்சிடுவேன்" என்று சொல்கிறார்.

    வாழ்த்துக்கள்

    வாழ்த்துக்கள்

    அதுசரி... இந்த தம்பதியை நாம எப்படி வாழ்த்துறதுன்னு தெரியலயே... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்றா அல்லது நூறாண்டு காலம் வாழணும் என்றா... தீர்க்கசுமங்கலி பவ என்றா... ஒன்னும் புரியல... எப்படியோ சந்தோஷமா இருந்தா சரி!!

    English summary
    Man Married 16 year Old Hologram in Japan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X