For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியின் லட்சியம் முக்கியம்.. சிஇஓ பணியை ராஜினாமா செய்த ரூபின்.. வருத்தத்துடன் ஏற்று கொண்ட சலோந்தோ

தனது குடும்பத்தை பார்த்து கொள்வதற்காக சிஇஓ பணியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜெர்மானியர் ஒருவர்.

Google Oneindia Tamil News

பெர்லின்: தனது குடும்பத்தை பார்த்து கொள்வதற்காகவும், மனைவியின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதற்காகவும் தனது பதவியை பணியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜெர்மனியை சேர்ந்த பிரபல ஆடை உற்பத்தி நிறுவனத்தின் சிஇஓ ரூபின் ரிட்டர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்ற சூழல் தான் இன்று நிலவுகிறது. அப்படி குடும்பத்துக்காக வேலைக்கு செல்பவர்கள், குடும்பத்தை மறந்து வேலையே கதி என கிடப்பதை பல குடும்பங்களில் பார்த்திருப்போம்.

 பாரத் பந்த்: இரு மாநில பேருந்துகள் ரத்து; தமிழக-கர்நாடக எல்லையில் வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி பாரத் பந்த்: இரு மாநில பேருந்துகள் ரத்து; தமிழக-கர்நாடக எல்லையில் வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச்சாவடி

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் குடும்பங்களில் குழந்தைகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எத்தனை பணம் சம்பாதித்தாலும் குழந்தைகளை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை என பலர் புலம்புவதை நாம் கேட்டிருப்போம்.

குடும்பத்திற்காக

குடும்பத்திற்காக

ஆனால் ஜெர்மனியை சேர்ந்த பிரபல பிரபல ஆடை உற்பத்தி நிறுவனத்தின் சிஇஓ ரூபின் ரிட்டர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வேலையை ராஜினாமா செய்து ஆர்ச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஒரு சேர கொடுத்திருக்கிறார். 38 வயது ரூபின் ரிட்டரின் இந்த முடிவு தான் தற்போது சமூகவலைதளங்களின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

முன்னணி ஆன்லைன் பிராண்ட்

முன்னணி ஆன்லைன் பிராண்ட்

பெர்லினை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் சலாந்தோ ஆடை நிறுவனத்தில் கடந்த 2010ல் தலைமை செயல் அதிகாரியாக சேர்ந்தார் ரூபின் ரிட்டர். மூன்று சிஇஓக்களில் ஒருவராக செயல்பட்டு வரும் ரூபின், சிறு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட சலாந்தோவை உலகின்
முன்னணி ஆன்லைன் பேஷன் பிரான்டுகளில் ஒன்றாக உயர்த்தினார்.

திடீர் ராஜினாமா

திடீர் ராஜினாமா

இந்த சூழலில் ரூபின் ரிட்டர் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சலாந்தோ நிறுவனம் அறிவித்துள்ளது. அவரது ஒப்பந்தம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அடுத்த ஆண்டுடன் அவர் சிஇஓ பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதற்கு ரூபின் சொன்ன காரணம் தான் இதில் ஹைலைட். தனது குடும்பத்துடன் போதிய நேரம் செலவழிக்க முடியவில்லை என்பதற்காக தான் தனது வேலையை துறக்கும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறுகிறார் ரூபின். வளர்ந்து வரும் தனது குடும்பத்துடன் போதிய நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம் என தனது ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்பு

ஏற்பு

மேலும் தனது மனைவியின் தொழில்முறை லட்சியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும் ரூபின் அதில் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு வருத்தம் அளிக்கக் கூடியது தான் என்றாலும், தாங்கள் அதை ஏற்றுக்கொள்வதாக சலாந்தோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குடும்பத்திற்கு முன்னுரிமை அளித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ள ரூபின் தான் தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறார்.

English summary
The chief executive of online fashion retailer Zalando is stepping down to focus on his family, saying his wife’s career should “take priority” in the coming years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X