For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”காதலிக்கு ஜெயிலே பரவாயில்லை” – தொல்லை தாங்காமல் பரோலில் வந்தவர் ஜெயிலுக்கு ’ரிட்டர்ன்’

Google Oneindia Tamil News

பாரிஸ்: சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த 50 வயதுக்காரர், காதலி டார்ச்சர் தாங்க முடியாமல் மீண்டும் தவறு செய்து சிறைக்கு சென்றார்.

பிரான்ஸ் நாட்டின் பாஸ் டி கேலாய்ஸ் நகரை சேர்ந்த ஒருவர், குடி போதையில் வாகனம் ஓட்டியதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் சமீபத்தில் பரோலில் வெளியில் வந்தார். பரோலில் வெளி வரும் கைதிகளுக்கு, எலக்ட்ரானிக் சிப் ஒன்றை உடலில் பொருத்தி அனுப்புவது வழக்கம்.

எலக்ட்ரானிக் சிப்:

பரோல் காலம் முடிந்து அவர்கள் மீண்டும் சிறைக்கு வரவேண்டும். பரோல் காலத்தில் தப்பி விடாமல் இருக்க எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்படுகிறது. இந்நிலையில் பரோலில் வந்த வாலிபர், திடீரென தன் உடலில் இருந்த எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்து விட்டார்.

காதலி டார்ச்சர்:

அதில் இருந்து சிக்னல் வராததால், உஷாரடைந்த அதிகாரிகள் உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தி ஆசாமியை பிடித்தனர். விசாரணையில், "காதலி டார்ச்சர் தாங்க முடியவில்லை.

என்னை ஜெயில போடுங்க:

அதனால்தான் எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்தேன். வெளியில் இருந்து காதலியிடம் மோதிக் கொண்டிருப்பதை விட சிறையில் இருப்பது மேல். என்னை சிறைக்கு அழைத்து செல்லுங்கள்"என்று அவர் சர்வ சாதாரணமாக கூறினார்.

சிறிய குற்றங்கள்:

அதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரசு வக்கீல் கூறுகையில், "போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சிறுசிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார்.

ஜாலி! நான் ஜெயிலுக்கு போறேன்:

இப்போது எலக்ட்ரானிக் சிப்பை துண்டித்து குற்றம் புரிந்ததற்காக, மேலும் 2 மாதங்கள் அவர் சிறையில் இருப்பார்" என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் வெளிவரும் "தி லோக்கல்" பத்திரிகை வெளியிட்டுள்ளது.

English summary
Man in Paris arrested by police for small crimes. He came in baroll and again went to jail because of lover torture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X