For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேண்ட்டிற்குள் மறைத்து உயிருள்ள பாம்பைக் கடத்த முயற்சித்த பயணி.. பிறகு என்ன நடந்தது தெரியுமா?

விமானத்தின் மூலம் பாம்பைக் கடத்த முயற்சித்த பயணியை ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பேண்ட்டிற்குள் மறைத்து உயிருள்ள பாம்பைக் கடத்த முயற்சித்த பயணி | Oneindia Tamil

    பெர்லின் : ஜெர்மனியில் விமானத்தில் பாம்பை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாம்பு, நட்சத்திர ஆமை போன்ற உயிரினங்களை வெளிநாடுகளுக்கு கடத்தும் சம்பவம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற உயிரினங்களை பெரும்பாலும் விமானங்களிலேயே கடத்துகின்றனர் கடத்தல்காரர்கள்.

    அப்படி அவர்கள் கடத்தும் போது சமயங்களில் விமான நிலைய காவலர்களிடம் பிடிபடுவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம் ஜெர்மனி நாட்டில் நடைபெற்றுள்ளது. அதுவும் பிடிப்பட்ட நபர் கடத்த முயன்றது உயிருடன் உள்ள ஒரு பாம்பை.

    ஜெர்மன் பயணி:

    ஜெர்மன் பயணி:

    ஜெர்மனி தலைநகர் பெர்லினின் சோபெல்ட் விமான நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், விமான நிலையத்துக்கு அவசர அவசரமாக வந்து இஸ்ரேல் செல்லும் விமானத்தை பிடிக்க முயன்றார்.

    அதிகாரிகள் சந்தேகம்:

    அதிகாரிகள் சந்தேகம்:

    அவரது நடவடிக்கையை பார்த்து சந்தேகமடைந்த விமான நிலைய காவல் அதிகாரிகள், அந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரது பேண்டிற்குள் ஒரு துணிப்பையை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி:

    அதிர்ச்சி:

    அந்த பையை பிரித்து பார்த்தபோது, அதில் சுமார் 16 இன்ஞ்ச் நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த நபரை உடனடியாக கைது செய்தனர். பாம்பையும் மீட்டனர்.

    விஷமற்ற பாம்பு:

    விஷமற்ற பாம்பு:

    அந்த நபர் கடத்த முயன்ற பாம்பு விஷத்தன்மையற்ற பாம்பு வகையை சேர்ந்தது. பெரும்பாலும் வனஉயிரின காப்பகங்களில் காட்சிக்காக வைக்கப்படும் பாம்பு இனம் அது. இந்த பாம்பை எடுத்து செல்வதற்கான முறையான ஆவணங்கள் பிடிப்பட்ட நபரிடம் இல்லை.

    கடந்தல் திட்டம்:

    கடந்தல் திட்டம்:

    எனவே, பிடிபட்ட நபர் பாம்பை காட்டி மிரட்டி, விமானத்தை கடத்த முயல்வதற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என ஜெர்மன் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் நடந்து சுமார் 20 நாட்கள் கழித்து, இதுகுறித்து செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Customs officers at a German airport arrested a snake smuggler, who attempted to smuggle a serpent inside his pant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X