For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸில் முதலாளியின் தலையை வெட்டி வேலியில் தொங்கவிட்ட நபர் தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸில் தனது முதலாளியின் தலையை வெட்டி அதை வேலி மீது தொங்கவிட்ட நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஐசரே பகுதியில் உள்ள கேஸ் பேக்டரியில் பணிபுரிந்து வந்தவர் யாசின் சாஹில்(35). அவர் கடந்த ஜூன் மாதம் தனது முதலாளி ஹெர்வே கார்னராவின் தலையை வெட்டி அதை பேக்டரியின் வேலியில் தொங்கவிட்டு சுற்றி ஐஎஸ்ஐஎஸ் கொடிகளை நட்டு வைத்தார்.

Man who severed his boss' head committs suicide

இந்த சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட சாஹில் பாரீஸின் புறநகர் பகுதியில் உள்ள ஃப்ளூரி மெரோகிஸ் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்ட அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாஹில் பிரான்ஸில் உள்ள பான்ட்ராலியர் நகரில் பிறந்தவர். திருமணமான அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் 2005ம் ஆண்டு மற்றும் 2006ம் ஆண்டு உளவுத் துறையின் கவனத்தை ஈர்த்தார். உளவுத் துறை அவரைப் பற்றிய விசாரணையை 2008ம் ஆண்டோடு கைவிட்டது.

மீண்டும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவர் 2013ம் ஆண்டு உளவுத் துறையின் கவனத்தை ஈர்த்தார். பாரீஸில் கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர். இதையடுத்து பிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பிரான்ஸின் ஆர்லியன் பகுதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் நடத்திய சதி முறியடிக்கப்பட்டது.

English summary
35-year old man who beheaded his employer and pinned his head to a fence of an industrial gas factory has hanged himself to death in Paris prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X