For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்சன் மண்டேலா உடல் நாளை அடக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

ஜோகன்னஸ்பெர்க்: காலமான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

95 வயதாகும் நெல்சன் மண்டேலா, கடந்த 5-ந் தேதி ஜோகன்னஸ்பெர்க் நகரில் காலமானார். அதை தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்செலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. அதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Mandela makes final journey home

அதை தொடர்ந்து பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் 3 நாட்கள் தலைநகர் பிரிட்டோ ரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏராளமானாவர்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலத்தினர்.

இன்று காலை மண்டேலா உடல் இளம் வயதில் அவர் வாழ்ந்த சேப் மாகாணத்தின் பூர்வீக குனு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் ஏராளமானவர்கள் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

மண்டேலாவின் இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு சொந்தமான தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

English summary
On a final journey to his home village where he had wanted to spend his final days, the remains of Nelson Mandela were honored amid pomp and ceremony on Saturday at an air base in South Africa’s capital before being loaded onto a plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X