For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைசி வெளிநாட்டு பயணம்... மியான்மர் சென்றார் பிரதமர் மன்மோகன்சிங்

By Mathi
Google Oneindia Tamil News

நேபியிடா: பிரதமர் மன்மோகன் தனது கடைசி வெளிநாட்டுப்பயணமாக இன்று மியான்மர் சென்றடைந்தார்.

பிம்ஸ்டெக் என்ற பெயரில் பல்துறை தொழில் நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக வங்கக்கடல் நாடுகள் ஓரணியாக செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பில், இந்தியா, வங்காளதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய 7 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Manmohan Singh in Myanmar, could be his last foreign trip

இந்த பிம்ஸ்டெக் நாடுகளின் மூன்றாவது உச்சி மாநாடு மியான்மரின் நேபியிடாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாடு நாளை நிறைவு பெறுகிறது. நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசுகிறார்.

இதற்காக இரண்டு நாள் பயணமாக அவர் இன்று மியான்மர் சென்றடைந்தார். பிரதமர் என்ற வகையில் மன்மோகன்சிங் மேற்கொள்கிற கடைசி பயணமாக இதுவே அமையும். அங்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி மன்மோகன்சிங்குக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இம் மாநாட்டின் இடையே பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்சே, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் பிற தலைவர்களை சந்தித்துப்பேச உள்ளார்.

English summary
Prime Minister Manmohan Singh left for Myanmar on Monday morning to attend the BIMSTEC Summit where he is expected to make a strong pitch for giving a fillip to India's Look East policy and explore ways to enhance connectivity, transport, trade, tourism and other linkages to all the northeastern states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X