For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஆதரவு?

நடந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பொதுக் குழுக் கூட்டத்தின்போது இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க பெரும்பாலான நாடுகள் ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நாவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இத்தகவல் ஐ.நா.இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரம் (நவ.7-ந்தேதி) நடந்த ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் 50-க்கும் அதிகமான உறுப்பு நாடுகளின் பேச்சாளர்கள், 15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீரமைப்பு குறித்த கருத்துக்கள், முன்னோட்டத் திட்டங்கள், அதிலுள்ள சாதக பாதகங்கள் தொடர்பான அம்சங்களை எடுத்துரைத்தனர்.

Many UN members favour UNSC permanent seat for India

அப்போது, பெரும்பாலான நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க ஆதரவு தெரிவித்தன. உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியாவின் கருத்துக்கள் உலக அரங்கில் முன்வைக்கப்பட வேண்டும் என்று அந்த நாடுகள் கூறின.

இந்தியாவுடன் பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தின. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் குறித்து நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அதிருப்தி நிலைப்பாடு ஆகியவை குறித்தும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்

இதுகுறித்து ஐ.நாவுக்கான இங்கிலாந்து தூதர் மேத்வ்யு ரிகார்ப்ட கூறுகையில், ஆப்பிரிக்கா, இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

English summary
United Nations: India's bid for a permanent seat in a reformed UN Security Council has received a strong support from many UN member states, including the UK and France, who emphasised that the the world body's top organ must reflect the emergence of new global powers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X