For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் கொரிய வரலாற்றில் முதல்முறையாக கணவரை பலாத்காரம் செய்ததாக பெண் மீது வழக்கு

By Siva
Google Oneindia Tamil News

சியோல்: தென் கொரியாவில் 40 வயது பெண் ஒருவர் தனது கணவரை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதால் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்தவர் 40 வயது பெண் ஷிம். அவர் தனது கணவரை வீட்டிற்கு 29 மணிநேரமாக பூட்டி வைத்துள்ளார். மேலும் அப்போது அவர் தனது கணவரை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார்.

South Korea

இதையடுத்து கணவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஷிம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷிம்மும், அவரது கணவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அவருடன் உறவு கொண்டால் அதை விவாகரத்து வழக்கில் ஆதாரமாக தெரிவிக்கலாம் என்று நினைத்து அவர் அவ்வாறு செய்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவில் கணவரை பலாத்காரம் செய்ததாக முதல் முறையாக ஒரு பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமண உறவில் பலாத்காரம் செய்வது குற்றம் என்று அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தது.

முன்னதாக ஆயுதத்தை காட்டி மிரட்டி மனைவியுடன் உறவு கொண்ட நபருக்கு உள்ளூர் நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 40-year old South Korean woman is charged with the rape of her husband. She locked her husband inside the house for 29 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X