For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெறும் 2 மணி நேரம்.. ரூ.1.15 லட்சம் கோடியை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்.. என்ன காரணம்?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த இரண்டு மணி நேரத்தில் பங்கு வர்த்தகத்தில் சுமார் 1.15 லட்சம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மார்க் 2 மணி நேரத்தில் 1.15 லட்சம் கோடி இழக்க என்ன காரணம் ?- வீடியோ

    நியூயார்க்: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த இரண்டு மணி நேரத்தில் பங்கு வர்த்தகத்தில் சுமார் 1.15 லட்சம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறார்.

    கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் மார்க் ஜூக்கர்பெர்க் பங்கு வர்த்தகத்தில் ரூ.3 லட்சம் கோடியை இழந்து இருக்கிறார். வரும் நாட்களில் இதன் மதிப்பும் இன்னும் அதிகம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. இதிலிருந்து அவரது பங்கு மதிப்புகள் குறைந்து வருகிறது.

    இரண்டே மணி நேரம்

    இரண்டே மணி நேரம்

    காலையில் இருந்து மும்பையில் பங்கு வர்த்தகம் உச்சம் தொட்டது. ஆனால் அமெரிக்காவில் பலரது பங்குகள் சரிவை சாதித்தது. இதனால் பேஸ்புக்கின் பங்கும் மார்க் ஜுக்கர்பெர்க்கின் பங்கும் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதனால் பேஸ்புக் நிறுவனம் 10 லட்சம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறது. இரண்டு மணி நேரத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் 1.15 லட்சம் கோடி ரூபாயை இழந்து இருக்கிறார்.

    அதிகம்

    அதிகம்

    இதே நிலை தொடர்ந்தால் மார்க்கின் நிலை இன்னும் மோசமாகும். இன்னும் 94 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க நேரிடும். அதேபோல் பணக்காரர்களின் பட்டியலில் 6 வது இடத்திற்கு தள்ளப்படுவார். இந்த நிலையில் அவர் 4 லட்சம் கோடி ரூபாயோடு அவர் பங்கு வர்த்தகம் முடியும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு முன்பு

    இதற்கு முன்பு

    இதற்கு முன்பே பங்கு வர்த்தகத்தில் 3 சதவிகிதம் வரை தினமும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு மாதம் முன் ரூபாய் 1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. தகவல் திருட்டிற்காக மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு, பேஸ்புக்கில் தகவல் திருடப்பட்டதை ஒப்புக்கொண்ட பின் இழப்பு ரூபாய் 3 லட்சம் கோடியாக அதிகரித்தது.

    டெலிட் பேஸ்புக்

    டெலிட் பேஸ்புக்

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவரது பங்கு மதிப்பு தொடர்ந்து சரிகிறது.

    English summary
    Mark Zuckerberg faces Rs.1.15 lakh crore loss in market after privacy scandal issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X