For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி மாதிரியே "கையில் வளையல்" போடப் போகிறதாம் செவ்வாயும்

Google Oneindia Tamil News

நியூயார்க்: எப்படி சனி கிரகத்தைச் சுற்றிலும் வளையம் இ்ருக்கிறதோ அதேபோல செவ்வாய் கிரகத்தைச் சுற்றிலும் கூட வளையம் உருவாகப் போகிறதாம்.

செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவான போபோஸ் மெதுவாக கிரகத்தை நோக்கி வீழ்ந்து வருகிறதாம். இன்னும் 10 முதல் 20 மில்லியன் ஆண்டுகளில் இது மேலும் நெருங்கி ஒரு பெரிய வளையமாக மாறி செவ்வாயைச் சுற்றிலும் நின்று விடுமாம்.

தற்போது சனி, ஜூபிடர், யுரேனஸ், நெப்ட்யூன் ஆகியவற்றைச் சுற்றி வளையம் உள்ளது என்பது நினைவிருக்கலாம். எனவே எதிர்காலத்தில் இதே போன்ற வளையம் செவ்வாய் கிரகதத்தைச் சுற்றியும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆய்வில் தகவல்...

ஆய்வில் தகவல்...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆய்வாளர் துஷார் மிட்டல் உள்ளிட்ட ஆய்வாளர்கள் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தக் குழிவில் இடம் பெற்றுள்ள இன்னொரு ஆய்வாளர் பெஞ்சமின் பிளாக். இவர்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆவர்.

ராட்சத வளையமாக...

ராட்சத வளையமாக...

செவ்வாயை நோக்கி வேகமாக நெருங்கி வரும் போபோஸ் ஒரு கட்டத்தில் ராட்சத வளையமாக மாறி அப்படியே கிரகத்தைச் சுற்றி நின்று விடும் என்று இரக்ள் கூறியுள்ளனர்.

நகர்ந்து செல்லும் நிலவு...

நகர்ந்து செல்லும் நிலவு...

அதேசமயம், நமது நிலவானது நம்மை விட்டு விலகிப் போய்க் கொண்டுள்ளது. ஆண்டுக்கு சில சென்டிமீட்டர் என்ற அளவில் இந்த நகர்வு இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் நமக்கு நிலவே இல்லாத நிலையும் ஏற்படும்.

நெருங்கி வரும் போபோஸ்...

நெருங்கி வரும் போபோஸ்...

ஆனால் போபோஸ் அப்படி இல்லை. அது ஆண்டுக்கு சில சென்டிமீட்டர் என்ற அளவில் செவ்வாய் கிரகத்தை நோக்க நகர்ந்து வருகிறது. எனவே இது செவ்வாய் கிரகத்தில் ஒன்று மோதி விழுந்து விடும் அல்லது வளையமாக மாறி விடும். என்று அவர்கள் கூறியுள்ளனர்.

டிரைட்டன்

டிரைட்டன்

இதேபோல கிரகத்தை நெருங்கி வரும் நிலவு இன்னொன்று உள்ளது. அது நெப்ட்யூனின் மிகப் பெரிய நிலவான டிரைட்டன். அதுவும் நெப்ட்யூனை நோக்க நெருங்கி வருகிறதாம்.

வருங்கால சந்ததியினர்...

வருங்கால சந்ததியினர்...

எப்படியோ நம்முடைய நிலவு காணாமல் போவதையும், செவ்வாயின் நிலவு நெருங்கி வருவதையும் நாம் காணப் போவதில்லை. அதற்குள் நமது வருங்கால சந்ததியினர் செவ்வாயில் குடியேறி அவர்களும் பல தலைமுறைகளைக் கண்டு விடுவார்கள் என நம்பலாம்.

English summary
Mars' largest moon, Phobos, is slowly falling towards the planet, and in about 10-20 million years, the moon will get so close that it will be shredded into a ring like the cones encircling Saturn, Jupiter, Uranus and Neptune, researchers, including one of Indian-origin, have estimated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X