For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

115 “கே” ஜோடிகளுக்கு கனடாவில் கோலாகல டும்.. டும்.. டும்!

Google Oneindia Tamil News

டோரன்டோ: கனடாவின் டோரன்டோ நகரில் 115 ஓரினச் சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருமண ஜோடிகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட் லேஸ்லெட் மற்றும் காலின் குந்தர் கடந்த 37 வருடங்களாக ஓரினச் சேர்க்கையாளர்களாக உள்ளனராம். இப்போது திருமண புந்தத்தில் இணைந்துள்ளனர்.

இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண் ஜோடிகள். மற்றவர்கள் லெஸ்பியன் எனப்படும் பெண் ஜோடிகள். டோரன்டோவில் கொண்டாடப்பட்டு வரும் உலக பெருமை வாரத்தின் ஒரு பகுதியாக இந்தத் திருமணம் நடந்தது.

காதலின் சக்தி

காதலின் சக்தி

உலகம் முழுவதுமிருந்து இந்த ஜோடிகள் இந்தத் திருமணத்தில் பங்கேற்றனர். டோரன்டோ நகர தற்காலிக மேயர் நாம் கெல்லி, காதலின் சக்தியை பறை சாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.

உறவுகள்தான் பெருமை

உறவுகள்தான் பெருமை

மேலும் அவர் கூறுகையில், இப்படிப்பட்ட உறவுகள் பெருமைக்குரியவை. இன்று அனைவரும் இந்த உறவுகளில் சங்கமித்துள்ளனர்.

நம்பிக்கையுடன்

நம்பிக்கையுடன்

இந்த ஜோடிகளில் பலர் தங்களது நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை என்ற போதிலும் தாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக குறிப்பிட்டனர்.

15 நாடுகளில் மட்டும்தான்

15 நாடுகளில் மட்டும்தான்

உலகில் 15 நாடுகளில் மட்டுமே ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டு திருமணங்களுக்கும் அங்கீகாரம் தரப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2005 முதல் கனடாவில்

2005 முதல் கனடாவில்

கனடாவில் 2005ம் ஆண்டு ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து ஓரினச்சேர்க்கை திருமணங்கள் நடக்கின்றன.

00 ஜோடிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

00 ஜோடிகள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

ஆரம்பத்தில் 200 ஜோடிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் புதிய உலக சாதனையையும் படைக்கலாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் 115 ஆக ஜோடிகள் சுருங்கி விட்டனர்.

ஆஸ்திரேலியா.. கானா.. தைவான்

ஆஸ்திரேலியா.. கானா.. தைவான்

தைவான், ஆஸ்திரேலியா, கானா போன்ற நாடுகளிலிருந்தும் ஜோடிகள் வந்திருந்தனர்.

12 முறைகளில்

12 முறைகளில்

115 ஜோடிகளுக்கும் 12 மத, நம்பிக்கை முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இவர்களில் சிலர் இஸ்லாமியர்கள் ஆவர்.

சீக்கிய அமைச்சரின் தலைமையில்

சீக்கிய அமைச்சரின் தலைமையில்

கனடா நாட்டு அமைச்சரும், சீக்கியருமான யோகி அகால் ஒரு ஜோடியின் திருமணத்திற்கு தலைமை தாங்கினார்.

English summary
Australians Richard Laslett and Collin Gunther waited 37 years to say "I do" to one another. The couple finally got their chance on Thursday in Toronto, at a mass wedding that brought 115 gay and lesbian couples together, as part of the city's World Pride Week. The pairs from around the world gathered in the garden of a midtown Neo-Gothic castle to "celebrate the power of love," Toronto interim Mayor Norm Kelly said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X