For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம பக்கத்து வீட்டில் ஒரு பெரிய்ய "இருட்டு"ப் பையன் ஒளிஞ்சிருக்கான்... நாசா தகவல்

Google Oneindia Tamil News

வாஷி்ங்டன்: நமது காலக்ஸிக்கு அருகில் உள்ள இன்னொரு காலக்ஸியில் மிகப் பெரிய கருந்துளை இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

எந்த கேலக்ஸியிலும் இந்த அளவுக்கு மிகப் பெரிய கருந்துளை இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பெரியது என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கருந்துளையை நாம் கண்ணால் பார்க்க முடியாது. மாறாக அகச்சிவப்பு கதிர் வீச்சு மூலமாகவே அதை அறிய முடியும். இருப்பினும் இதுவரை யாரும் நேரடியாக கருந்துளையை பார்க்க முடிந்ததில்லை.

டிரையாங்குலம் 2...

டிரையாங்குலம் 2...

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலக்ஸியின் பெயர் டிரையாங்குலம் 2 ஆகும். இது நமது பால்வளி மண்டலத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது. 1000 நட்சத்திரக் கூட்டம்தான் இதில் உள்ளது. இது சின்ன காலக்ஸி தான்

ஆய்வு...

ஆய்வு...

இந்த காலக்ஸியின் 6 நட்சத்திரங்களின் வெலாசிட்டியை வைத்து இந்த காலக்ஸியின் நிலை குறித்த ஆய்வை கலிபோர்னியா டெக்னாலஜி கழகம் மேற்கொண்டுள்ளது.

சவால்கள்...

சவால்கள்...

இதுகுறித்து அதன் உதவிப் பேராசிரியர் இவான் கிர்பி கூறுகையில், ‘இந்த காலக்ஸி பல சவால்களை நமக்கு விடுப்பதாக உள்ளது. இங்குள்ள 6 நட்சத்திரங்கள் மட்டும்தான் வெளிச்சத்தை உமிழ்கின்றன. அவற்றை தொலைநோக்கி மூலம் பார்க்க முடிகிறது.

மிகப்பெரிய கருந்துளை...

மிகப்பெரிய கருந்துளை...

இதை வைத்துப் பார்த்தால் மற்ற நட்சத்திரக் கூட்டத்தை மிகப் பெரிய கருந்துளை மறைப்பதாக உணர முடிகிறது. எனவே இதுதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப் பெரிய கருந்துளை என்று அறிய முடிகிறது' என்கிறார்.

English summary
Astronomers have found that the highest concentration of the elusive dark matter in any known galaxy, by measuring the mass of a nearby dwarf galaxy. Assistant professor of astronomy Evan Kirby said, "The ratio of dark matter to luminous matter is the highest of any galaxy we know".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X