• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மினா நகர் விபத்து பற்றி தகவல் அறிய 00966125458000 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

By Mayura Akilan
|

துபாய்: சவுதியில் புனித மெக்கா அருகே மினா நகரில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 227ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மினா நகர் விபத்து பற்றி தகவல் அறிய 00966125458000, 009661254960000 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்தும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட பல லட்சம் இஸ்லாமியர்கள், மினா நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சி மினாவில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டனர்.

அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். விழுந்தவர்கள் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர். இதில், 227 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழு மற்றும் மருத்துவக் குழுவினர் விரைந்துள்ளனர்.

ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் பற்றிய தகவல் அறிய 00966125458000, 009661254960000 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
At least 150 people are killed and 400 injured in a stampede in Mina, on the outskirts of the holy city of Mecca. Helpline number for emergency: 00966125458000
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more