For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னித்தன்மையை ரூ 5 கோடிக்கு ஏலம் விட்டு பின் வாபஸ் பெற்ற மருத்துவ மாணவி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் இணையதளத்தில் தனது கன்னித்தன்மை பகிரங்கமாக ஏலம் விட்டார். 8,01,000 அமெரிக்க டாலருக்கு அதாவது கிட்டத்தட்ட ரூ. 5 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட நிலையில் திடீரென ஏலத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் அந்த மாணவி.

அமெரிக்காவை சேர்ந்தவர் எலிசபெத் ரெய்னி (வயது27) இவர் இணையதளத்தில் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார்.

அமெரிக்காவில் விபசாரம் சட்டப்படி குற்றம் என்பதால் தனது விளம்பரத்தை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரச் செய்தார். அங்கு இதற்கெல்லாம் பெரிய அளவில் கெடுபிடி கிடையாதாம்.

இணையத்தில் விளம்பரம்

இணையத்தில் விளம்பரம்

ரெய்னி சமீபத்தில் தான் தனது இணையதளத்தை தொடங்கினார். தனது கன்னிதன்மையை ஏலம்விடுவது குறித்து மார்ச் 31ல் தகவல் வெளியிட்டு இருந்தார்.

மருத்துவமாணவி

மருத்துவமாணவி

இணையதள பக்கத்தில் தான் ஒரு அமெரிக்க மருத்துவ கல்லூரி மாணவி என கூறி உள்ள ரெய்னி எந்த கல்லூரி என்று கூறவில்லை

கன்னித்தன்மை ஏலம்

கன்னித்தன்மை ஏலம்

இப்போது, என் கன்னித்தன்மையை ஏலம் விட முடிவு செய்து உள்ளேன். நான் வேறு எந்த வழியிலும் நான் கன்னித்தன்மையை இழக்க விரும்பவில்லை என கூறி இருந்தார்.

முகம் காட்டாமல்

முகம் காட்டாமல்

நீண்ட நாட்கள் தனது முகத்தை காட்டாமல் மறைத்து கவர்ச்சிகரமான புகைப்படத்தை மட்டும் அதில் வெளியிட்டார் ரெய்னி.

முகத்தை வெளிக்காட்டிய ரெய்னி

முகத்தை வெளிக்காட்டிய ரெய்னி

சமீபத்தில் தான் தனது முழு அளவிலான புகைப்படத்தை வெளியிட்டார். அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் பிறந்தாலும் சவுதி அரேபியாவில் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார் ரெய்னி.

அம்மாவை பறிகொடுத்தவர்

அம்மாவை பறிகொடுத்தவர்

தனது பத்து வயதில் அம்மாவை பறிகொடுத்துவிட்டதாகவும், வசதியான வாழ்க்கைக்காகவே இதுபோன்று கன்னித்தன்மையை ஏலம்விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நான் கன்னிதான்

நான் கன்னிதான்

27 வயது வரைக்கும் நான் கன்னியாகவே இருக்கிறேன். காரணம், படிப்பு, வேலைகளுக்கு மத்தியில் தனக்கு செக்ஸ் உறவு என்பது இரண்டாம்பட்சம்தான் என்று கூறியுள்ளார்.

ரூ.5 கோடிக்கு ஏலம்

ரூ.5 கோடிக்கு ஏலம்

உச்சபட்சமாக இவரது கன்னித்தன்மையை 8,01,000 அமெரிக்க டாலருக்கு கேட்கபட்டது. இது இந்திய பணத்தில் ரூ 5 கோடியாகும். ஆனால் திடீரென தனது கன்னித் தன்மை ஏலத்தை திரும்ப பெறுவதாக கடந்த 7 ந்தேதி அறிவித்துள்ளார்.

நான் ரொம்ப பிஸி

நான் ரொம்ப பிஸி

என்னுடைய வேலையில் நான் ரொம்ப பிஸி எனவேதான் ஆண்களை இதுவரை என் வாழ்வில் அனுமதிக்க முடியாமல் போய்விட்டது என்கிறார் ரெய்னி.

வெளிநாட்டில் இது சகஜமப்பா

வெளிநாட்டில் இது சகஜமப்பா

கன்னித்தன்னமையை வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் ஏலம் விடுவது இது முதல் முறையல்ல கடந்த 2012 அக்டோபர் மாதம் பிரேசிலை சேர்ந்த கேட்டரினா மிக்லோரினி (வயது 21) தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார்.

ஏமாற்றிய தொழிலதிபர்

ஏமாற்றிய தொழிலதிபர்

அப்போது ஜப்பானை சேர்ந்த கோடீஸ்சுவரர் நட்சு (53) 4,85,000 பவுண்டுக்கு ஏலத்தில் வெற்றி பெற்றார். ஆனால் நட்சு பணத்தை கொடுக்கவில்லை. இதனால் விளம்பரத்துக்காக கன்னித்தன்மையை நட்சு ஏலம் எடுத்ததாக கூறி அவரது ஏலத்தை ரத்து செய்தார்.

தொடர்ந்த ஏலம்

தொடர்ந்த ஏலம்

மிக்லோரினி மீண்டும் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். அப்போது அவரது கன்னித்தன்மை 62,000 பவுண்டுக்கே ஏலம் போனது.

படிப்புக்காக ஏலம்

படிப்புக்காக ஏலம்

2009 ல் அலினா பெர்சியா (வயது18) தனது கல்லூரி படிப்பை தொடர கன்னித்தன்மையை ஏலம் விட்டார். அப்போது இத்தாலியை சேர்ந்த 45 வயது தொழில் அதிபர் ஏலத்தில் வெற்றி பெற்றார்.

லண்டன் இளம்பெண்

லண்டன் இளம்பெண்

2004 லண்டனை சேர்ந்த ரோசி ரெயிடு (வயது18) தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். 44 வயது விவகாரத்து பெற்ற ஒருவர் 8,400 பவுண்டுக்கு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 28-year-old medical school student who had planned to auctioning off her virginity on the internet and had received a high bid of $801,000 now says she won't go ahead with her part of the bargain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X