For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்பி பொம்மையை பார்த்திருபப்பீங்க, ஹிஜார்பியை பார்த்திருக்கிறீர்களா?

By Siva
Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பார்பி பொம்மைகளுக்கு உடல் முழுவதையும் மறைக்கும்படி ஆடை அணிந்து தலையில் முக்காடு போட்டு அதற்கு ஹிஜார்பி என்று பெயர் வைத்துள்ளார்.

நைஜீரியாவை சேர்ந்தவர் ஹனீபா ஆதம்(24). இங்கிலாந்தில் மருந்தியலில் முதுகலை பட்டம் பெற்று நைஜீரியாவில் வசித்து வருபவர். அவர் இன்ஸ்டாகிராமில் ஹிஜார்பி என்ற பெயரில் கணக்கு துவங்கியுள்ளார்.

அந்த கணக்கில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

ஹிஜார்பி

ஹிஜார்பி

ஹிஜார்பி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் ஆதம் பொம்மைகளுக்கு அங்கம் தெரியாதபடி ஆடை அணிவித்து தலைக்கு ஹிஜாப் எனப்படும் முக்காடை போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். ஹிஜாபுடன் பொம்மைகள் இருப்பதால் அதற்கு ஹிஜார்பி என்று பெயர் வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

ஹனீபா ஆதமின் ஹிஜார்பி கணக்கு துவங்கப்பட்ட வேகத்தில் அது மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. அவரை இன்ஸ்டாகிராமில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.

பொம்மைகள்

பொம்மைகள்

பொம்மைகள் உடல் முழுவதையும் மறைத்து ஆடை அணிந்து நான் பார்த்தது இல்லை. அதனால் பொம்மைகளுக்கு உடல் அங்கங்களை மறைக்கும்படி ஆடை அணிந்து முக்காடும் போட ஆசைப்பட்டேன் என்கிறார் ஆதம்.

ஹிஜாப்

ஹிஜாப்

நான் ஹிஜார்பி கணக்கை துவங்கும் முன்பு எந்த பொம்மையையும் ஹிஜாபுடன் பார்த்தது இல்லை. ஹிஜாப் அணிந்தாலும் ஃபேஷனாக இருக்கலாம் என்பதையே ஹிஜார்பி தெரிவிக்கிறது என்று ஆதம் கூறியுள்ளார்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

என் ஹிஜார்பி கணக்கிற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் இளம் வயதில் இருந்தே ஹிஜாப் அணிந்து வருகிறேன். முஸ்லீமோ, முஸ்லீம் அல்லாதவர்களோ யாராக இருந்தாலும் குணம் தான் முக்கியம் என்று ஆதம் தெரிவித்துள்ளார்.

English summary
A 24-year old Nigerian woman's instagram account named Hijarbie featuring dolls wearing hijab has become a huge hit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X