For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதாங்க உலகத்திலேயே அபாயகரமான கக்கூஸாம்...!

Google Oneindia Tamil News

சைபீரியா: உலகிலேயே அபாயகரமான கழிப்பறை என்ற பெயரை இந்த டாய்லெட் பெற்றிருக்கிறது.

சைபீரியாவில் உள்ள ஒரு மலை உச்சியில், மலையின் நுனியில் எக்கி நின்றபடி காட்சி தருகிறது இந்த கழிப்பறை.

சைபீரியாவின் அல்டாய் மலைச் சிகரத்தில் உள்ள ஒரு மலை உச்சியில் இந்த கழிப்பறையை அமைத்துள்ளனர்.

ஏன் இவ்ளோ உயரத்தில் போய் கக்கூஸை கட்டி வைத்துள்ளனர் என்று கேட்கிறீர்களா.. வாங்க என்னன்னு போய் பார்த்துட்டு வருவோம்.

ரொம்ப கஷ்டமான இடத்தில் உள்ள கழிப்பறை

ரொம்ப கஷ்டமான இடத்தில் உள்ள கழிப்பறை

பார்க்கவே பதை பதைக்கும் வகையிலான உயரத்தில் இந்த கழிப்பறையை, அதுவும் மலை உச்சியின் நுனியில் கட்டி வைத்துள்ளனர்.

கடல் மட்டத்திலிருந்து 2600 மீ்ட்டர் உயரம்

கடல் மட்டத்திலிருந்து 2600 மீ்ட்டர் உயரம்

கடல் மட்டத்திலிருந்து 2600 மீட்டர் உயரத்தில் இந்த கழிப்பறை உள்ளது. அட்லாய் மலைப்பகுதியில் உள்ள கரா டியூரக் என்ற மலைச் சிகரத்தில் இந்த கழிப்பறை உள்ளது.

வானில மைய ஊழியர்களுக்காக

வானில மைய ஊழியர்களுக்காக

இந்த மலை உச்சியில் ஒரு வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பணியாற்றுகிறவர்களுக்காக இதை கட்டியுள்ளனராம்.

மாசத்திற்கு ஒருமுறை

மாசத்திற்கு ஒருமுறை

இந்த வானிலை மையத்திற்கு மாதம் ஒருமுறை யாராவது வருவார்களாம். வந்து அங்கு சேகரமாகியிருக்கும் வானிலை குறித்த புள்ளிவிவரங்களை எடுத்துச் செல்வார்கள். அப்படி வருபவர்களின் வசதிக்காகவே இந்த கழிப்பறை.

கிட்டத்தட்ட தொங்கியபடி

கிட்டத்தட்ட தொங்கியபடி

இந்த கழிப்பறையானது மலை உச்சியில் கிட்டத்தட்ட நுனிப்பகுதியில் தொக்கி நிற்பது போல இருப்பதால்தான் உலகிலேயே அபாயகரமான கழிப்பறை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

நிம்மதியா 'இருக்க' முடியுமா..?

நிம்மதியா 'இருக்க' முடியுமா..?

வெளியில் இருந்து பார்க்கும்போதே பீதி ஏற்படுகிறதே.. உள்ளே போய் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்ற அச்சம் படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுவது நியாயம்தான்.

1939ம் ஆண்டு முதல்

1939ம் ஆண்டு முதல்

இந்த கழிப்பறை ரொம்பவும் பழசானது. அதாவது 1939ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை பயன்பாட்டில் உள்ளதாம்.

வாங்களேன்.. ஒருவாட்டி இந்த டாய்லெட்டுக்கு போய்ட்டு வரலாம்...!

English summary
The toilet serves a remote weather station at Kara-Tyurek in the Altai Mountains and is is perched on a cliff 2,600 metres above sea level. Plucky staff who work at the station are visited once a month by a postman who collects weather data, and a helicopter which delivers food, water and wood for the stove each autumn.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X