For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா சீனா மோதலை தீர்க்க கடைசி வாய்ப்பு.. ஜெய்சங்கர், வாங் யி சந்திப்பு குறித்து சீன அரசு ஊடகம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் எல்லை பிரச்சனை தொடர்பாக முதல்முறையாக நேரில் சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பு குறித்து கருத்து கூறியுள்ள சீன ஊடகம், ஜெய்சங்கர் மற்றும் வாங் யி உடனான சந்திப்பு பிரச்சனைகளை தீர்க்க கடைசி வாய்ப்பு என்று எச்சரித்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் மோதல் நிலவி வரும் நிலையில் இந்தியா பதற்றத்தை தணிக்க முயற்சித்து வருகிறது. எனினும் சீனா மே மாதம் லடாக்கின் பாங்காங் திசோ ஏரி பகுதியில் உள்ள பிங்கர் 4 மற்றம பிங்கர் 8 இடையிலான பகுதிகளில் ஆக்கிuமித்த பகுதிகளில் இருந்து படைகளை வெளியேற்ற மறுத்து வருகிறது. இதுவே இப்போது இருநாடுகளுக்கும் இடையே பிரச்சனைக்கு மூலக்காரணமாக உள்ளது.

வரலாற்று பிழையை திருத்தி எழுத நல்ல வாய்ப்பு.. சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்! திருப்பம் வரலாற்று பிழையை திருத்தி எழுத நல்ல வாய்ப்பு.. சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்! திருப்பம்

பலமுறை எச்சரிக்கை

பலமுறை எச்சரிக்கை

சீனாவின் அத்துமீறலை கடுமையாக கண்டித்த இந்தியா பலமுறை எச்சரிததும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பின்வாங்க மறுத்துவிட்டது. இப்போது எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ தலைமைகள்

ராணுவ தலைமைகள்

எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்து வருவதால் இந்தியா மலை உச்சிகளை கைப்பற்றி வைத்துள்ளது. சீனா ஏதேனும் எதிர்தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுத்து விரட்ட ஆயத்தமாகி வருகிறது. இதேபோல் சீனாவும் இந்தியா மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இரு நாடுகளின் ராணுவ வீரர்களுமே அந்த நாட்டின் தலைநகரங்களில் உள்ள ராணுவ தலைமையகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் நிலைமை லடாக் எல்லையில் கவலை அளிக்கும் வகையில இருப்பதாக கூறப்படுகிறது,

ஒத்துவராத சீனா

ஒத்துவராத சீனா

முன்னதாக இந்தியா சீனா இடையே ராணுவ ரீதியாக பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஏனெனில் இந்தியாவின் கோரிக்கையான சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து வெளியேற சீனா மறுத்துவிட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலைகளுக்கு இருநாடுகளுமே திரும்பி செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இதற்கு சீனா இதுவரை ஒத்துவரவில்லை,

மாஸ்கோவில் பேச்சு

மாஸ்கோவில் பேச்சு

இந்நிலையில் அண்மையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ அமைச்சர்கள் எல்லை பிரச்சனை குறித்து பேசினார்கள். இதையடுத்து மீண்டும் தற்போது இந்தியா சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இந்த பேச்சுவார்த்தை குறித்து சீன அரசு ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' இன்று ஒரு செய்தி வெளியிட்டது. அதில் "நிபுணர்களின் கூற்றுப்படி ஜெய்சங்கருக்கும் சீன வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம் . கூட்டம் ஒரு நேர்மறையான முடிவை எட்டத் தவறினால், அல்லது இரு தரப்பினரும் படைவிலகல் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், சீனாவும் இந்தியாவும் நெருக்கடியை சமாதானமாக தீர்க்க வாய்ப்பில்லை என்பதற்கான ஆபத்தான சமிக்ஞையாக இருக்கலாம்" என்று தெரிவித்துளளார்கள் என கூறியுள்ளது.

English summary
Chinese State Media said that 'Meeting Between Jaishankar & Wang Yi Could be Last Chance for Resolution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X