For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக் டவுன் நேரத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசை - அதற்கு கொடுத்த விலை ரொம்ப காஸ்ட்லி

லாக்டவுன் நேரத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசைப்பட்ட நபர் ஒருவர் காரை எடுத்துக்கொண்டு ஹாயாக கிளம்ப, போலீசில் சிக்கி 1652 ஆஸ்திரேலியன் டாலர்கள் நம்ம ஊரில் 86 ஆயிரம் ரூபாய் பைன் கட்டியிருக்கிறார்.

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: நம்ம ஊர் கடையில் பட்டர் சிக்கன் என்ன விலை இருக்கும். கொஞ்சம் காஸ்ட்லியான கடையாக இருந்தால் ஒரு பிளேட் 500 ரூபாய் இருக்கும். அதுவே கொஞ்சம் பட்ஜெட் ஹோட்டலாக இருந்தால் 200 ரூபாயில் ஒரு பிளேட் வாங்கி சாப்பிட்டு விடலாம். ஆஸ்திரேலியாவில் கொரோனா லாக்டவுன் காலத்தில் பட்டர் சிக்கன் சாப்பிட ஆசைப்பட்ட நபர் ஒருவர் 32 கிலோ மீட்டர் போய் போலீசில் மாட்டியது மட்டுமல்லாமல் 1652 ஆஸ்திரேலியா டாலர்களை அபராதமாக கட்டியிருக்கிறார். நம்ம ஊரில் 86582.71 ரூபாய் தண்டம் கட்டி அந்த பட்டர் சிக்கனை சாப்பிட்டிருக்கிறார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் ஒன்றரை கோடி பேரை பாதித்துள்ளது. பல நாடுகளில் லாக்டவுன் அமலில் உள்ளது. இதில் ஆஸ்திரேலியாவும் விதிவிலக்கு அல்ல. அங்கே லாக்டவுன் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

யாராக இருந்தாலும் அபராதம் தீட்டி விடுவார்கள். மெல்போர்ன் நகரில் மக்கள் தேவையின்றி கூட்டமாக கூட தடை உள்ளது. அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. அந்த ஊரில் அதை பலர் கேட்டாலும் நம்ம ஊர் போல கேட்காமல் ஊர் சுற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

லாக்டவுன் விதி மீறல்

லாக்டவுன் விதி மீறல்

அரசின் உத்தரவை மதிக்காமல் ஒருவர் வெர்ரீபி பகுதியில் இருந்து மேற்கு மெல்போர்ன் பகுதிக்கு காரை எடுத்துக்கொண்டு வந்தார். வாய்க்கு ருசியாக பட்டர் சிக்கன் சாப்பிட வேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக லாக்டவுன் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை 32 கிலோமீட்டர் ஹாயாக காரை ஓட்டி வந்து பட்டர் சிக்கனும் சாப்பிட்டு விட்டு திரும்பினார்.

பைன் தீட்டிய போலீஸ்

பைன் தீட்டிய போலீஸ்

வீடு திரும்பும் வழியில் போலீசில் வசமாக மாட்டிக்கொண்டார். அப்புறம் என்ன போலீஸ் பைன் போட அதை கட்டித்தானே ஆகவேண்டும். ஒரு பிளேட் பட்டர் சிக்கன் சாப்பிட்ட குற்றத்திற்கு நம்ம ஊர் பணத்தில் 86 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினார்.

விதி மீறல் அபராதம்

விதி மீறல் அபராதம்

வார விடுமுறை நாள் என்பதால் வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றக்கிளம்பியவர்கள் எல்லாம் இப்படித்தான் வசமாக மாட்டி போலீசிடம் பைன் கட்டியிருக்கிறார்கள். 24 மணிநேரத்தில் 13ஆயிரம் வாகனங்களை பிடித்து பைன் தீட்டியிருக்கிறார்கள் காவல்துறையினர்.

Recommended Video

    Corona இந்தியாவில் Stage-3 நிலையை எட்டிவிட்டது - IMA பரபரப்பு தகவல்
    காஸ்ட்லி சிக்கன்

    காஸ்ட்லி சிக்கன்

    இந்த விசயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, என்ன பட்டர் சிக்கன்தான் கொஞ்சம் காஸ்ட்லியாகி விட்டது என்று ஏகத்திற்கும் கிண்டல் அடிக்கிறார்கள். நம்ம ஊராக இருந்தால் லக் இருப்பவர்கள் எப்படியாவது தப்பி வீடு வந்திருப்பார்கள்.

    English summary
    A man in Melbourne had violated the lockdown rules therefore he had to pay penalty 1652 australian dollar for ate one plate butter chicken for drive 32 KM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X