For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனமழை போல.. வானத்திலிருந்து கொட்டிய விசித்திர கற்கள்.. ஒவ்வொரு கல்லும் பலகோடி மதிப்பு..அதிசய நிகழ்வு

Google Oneindia Tamil News

பிரேசில்லியா: வானத்தில் இருந்து மழை பெய்து பார்த்து இருப்பீர்கள், ஆலங்கட்டி மழை பெய்து பார்த்து இருப்பீர்கள்.. ஆனால் கற்கள் மழை போல கொட்டி பார்த்து இருக்கிறீர்களா? பிரேசிலில் ஒரு நகரத்தில் வானத்தில் இருந்து கற்கள் கொட்டி இருக்கிறது.

பிரேசில் அருகே இருக்கிறது சாண்ட பிலோமினா என்ற நகரம். மிக சின்ன நகரமான இந்த பகுதி பிரேசிலில் இருக்கும் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாகும். அதிக அளவில் குடிசை பகுதிகள் காணப்படும் பிரேசிலின் வறுமையான பகுதிகளில் இந்த இடமும் ஒன்றாகும்.

இந்த இடத்தில்தான் வானத்தில் இருந்து கற்கள் கொட்டிய சம்பவம் நடந்து இருக்கிறது. உலக வானிலை ஆய்வாளர்களை இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இன்னொரு பெண்ணுடன் குடித்தனம்.. ஏமாற்றிய கணவனை அடித்து உதைத்து கட்டி இழுத்து சென்ற மனைவி!இன்னொரு பெண்ணுடன் குடித்தனம்.. ஏமாற்றிய கணவனை அடித்து உதைத்து கட்டி இழுத்து சென்ற மனைவி!

எப்போது நடந்தது

எப்போது நடந்தது

கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் குறித்த செய்தி இப்போதுதான் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. வானத்தில் இருந்து காலை 11 மணி அளவில் திடீரென கற்கள் விழுந்துள்ளது. கருப்பு நிறத்தில் நிறைய கற்கள் அடுத்தடுத்து மக்கள் மீது விழுந்துள்ளது. சில கற்கள் வீடுகள் மீதும், கார்கள் மீதும் விழுந்துள்ளது.

வானத்தில் இருந்து விழும்

வானத்தில் இருந்து விழும்

100க்கும் அதிகமான கற்கள் இப்படி வானத்தில் இருந்து விழுந்து உள்ளது. ஒவ்வொரு கல்லும் 10 செமீ அளவும், 200-300 கிராம் எடையும் கொண்டு உள்ளது. இந்த கற்கள் விண்கல் ஒன்றின் உடைந்த பாகம் என்று கூறப்படுகிறது. இந்த கற்கள் 4.6 பில்லியன் வருடம் பழமை வாய்ந்த கற்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதிப்பு

மதிப்பு

4.6 பில்லியன் வருடம் பழமை வாய்ந்த விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து, வெடித்து, இப்படி கற்களாக வானத்தில் இருந்து விழுந்துள்ளது. மொத்தம் 40 கிலோ கற்கள் இப்படி விழுந்துள்ளது. இது மிகவும் அரிதானது. உலகில் வெறும் 1.1% விண்கற்கள் மட்டுமே இப்படி இருப்பதாக கூறுகிறார்கள்.

எவ்வளவு ரூபாய்

எவ்வளவு ரூபாய்

இதன் மொத்த மதிப்பு 26 ஆயிரம் டாலர் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லும் பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்கிறார்கள். இந்த கற்களை அங்கிருக்கும் விவசாயிகள் பலர் எடுத்துள்ளனர். மக்களிடம் இருந்து இந்த கற்களை வாங்க அரசு முயன்று வருகிறது. இதை அதிர்ஷ்ட கற்கள், எங்கள் வறுமை இதனால் போக போகிறது என்கிறார்கள்.

English summary
Meteor shower poured Brazillian town like a rain a town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X