For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது இடத்தில் "அவசரமா".. சத்தம் போடாமல் ஒரு ஓரமா போய்.. மெக்சிகோவில் கலகல சட்டம்!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மெக்சிகோ: பொது இடத்தில் உறவு கொள்ள வேண்டும் என்றால் ஓரமாக போய் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ளலாம் என மெக்சிக்கோ நாடு அறிவித்துள்ளது.

அமெரிக்காவை ஒட்டிய மெக்சிக்கோ நாட்டில் பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள், கார்கள் என பெரும்பாலான இடங்களில் செக்ஸ் வைத்து கொள்வது வழக்கம். இதை கட்டுப்படுத்துவது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில் கவுதலஜாரா என்ற பகுதியில் பூங்காவில் உடலுறவு கொண்ட ஜோடியிடம் போலீஸார் தொந்தரவு செய்ததாகவும் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

இதையடுத்து பொது இடத்தில் செக்ஸ் வைத்து கொள்வோரை போலீஸார் எதுவும் செய்யக் கூடாது என நகர சபையில் கவுன்சிலர் மார்ஃபின் குற்றம்சாட்டினர். அப்போது அவர் கூறுகையில் மற்றவர்கள் முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள். எனினும் அதுபோல் நடந்து கொள்பவர்களை போலீஸார் தொந்தரவு செய்ய தேவையில்லை. இது பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதற்கும் வழி வகுக்குகிறது.

உத்தரவிட முடியும்

உத்தரவிட முடியும்

அதற்கு மாறாக யாரேனும் அவர்களுக்கு எதிராக புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸுக்கு உத்தரவிட வேண்டும் என கூறினார். இதையடுத்து அந்நாட்டின் கவுன்சில் ஒன்றின் நிர்வாகி லீவியர் மார்ட்டினெஸ் கூறுகையில் ஒரு குற்றம் நடைபெறும் போது ஒரு போலீஸ் அதிகாரி அதை தடுக்கக் கூடாது என எப்படி உத்தரவிட முடியும்? என்பது எனக்கு புரியவில்லை.

எல்லா நேரங்களிலும் இல்லை

எல்லா நேரங்களிலும் இல்லை

மேலும் கவுதலஜாரா மட்டுமல்லாது மெக்சிக்கோ நாட்டில் எந்த இடத்திலும் பொதுமக்கள் எல்லா நேரங்களிலும் பொது இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை. எனினும் பெரும்பாலான இளம் ஜோடிகள் தங்கள் பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.

ஹோட்டல்களில் கட்டணம்

ஹோட்டல்களில் கட்டணம்

அவர்களுக்கு வீட்டில் அந்தரங்கம் என்பது இல்லாமல் உள்ளது. இதற்காக ஹோட்டல்களில் ரூம் போட வேண்டுமானாலும் அவர்களால் அதற்கான அதிகபட்ச வாடகையை செலுத்த இயலாத நிலையுள்ளது என்றார்.

தொந்தரவு கூடாது

தொந்தரவு கூடாது

இதையடுத்து பொது இடங்களில் உடலுறவு கொள்ளும் ஜோடிகள் அருகியுள்ளவர்களுக்கு தொல்லை தருவதாக இருந்தால் மட்டும் அவர்களை கைது செய்யலாம் அப்படி யாருக்கும் தொல்லை தராமல் பொது இடத்தில் உடலுறவு கொண்டால் அவர்களை போலீஸார் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

சட்ட திருத்தம்

சட்ட திருத்தம்

பொது இடங்களில் செக்ஸ் வைத்து கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் யாரேனும் தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக புகார் அளித்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இனிமே அதுக்கு அவசரம்னா ஓரமா யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வேலையை முடிங்க மக்களே.

English summary
Mexican city tells police to ignore most sex in public and it should not be given disturbance to others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X