For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெக்சிகோவில்... பைசர் தடுப்பூசி போட்ட டாக்டருக்கு உடல்நலக்குறைவு...மருத்துவமனையில் அனுமதி!

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: பைசர் தடுப்பூசி போட்ட மெக்சிகோவை சேர்ந்த பெண் டாக்டருக்கு அலர்ஜி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுவாசிப்பதில் சிரமம், தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த பெண் டாக்டருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது.

Mexican doctor hospitalized after receiving Covid-19 vaccine

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக அங்கீகரிக்கப்பட்டது பைசர் / பயோஎன்டெக் நிறுவனத்தின் பைசர் தடுப்பூசி ஆகும். இந்த தடுப்பூசிகள் கொரோனாவை கட்டுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தடுப்பூசிகள் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் பைசர் தடுப்பூசி போட்ட மெக்சிகோவை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருக்கு அலர்ஜி ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மெக்சிகோவில் கடந்த 24-ம் தேதி முதல் பைசர் தடுப்பூசிகள் போட்டபப்ட்டு வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரப் பணியாளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்கியது. பைசர் தடுப்பூசி பெற்ற 32 வயது பெண் டாக்டருக்கு திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டது.

கை நழுவிப் போன ரஜினி.. மனம் தளராத பாஜக.. சசிகலாவை வைத்து அடுத்த ஆட்டத்துக்கும் ரெடி?கை நழுவிப் போன ரஜினி.. மனம் தளராத பாஜக.. சசிகலாவை வைத்து அடுத்த ஆட்டத்துக்கும் ரெடி?

சுவாசிப்பதில் சிரமம், தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்த பெண் டாக்டர் நியூவோ லியோனில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது ஆரம்ப நோயறிதல் 'என்செபலோமைலிடிஸ்' என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. என்செபலோமைலிடிஸ் என்பது மூளை மற்றும் முதுகெலும்புகளின் வீக்கம் ஆகும் எனவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

English summary
A women doctor from Mexico who was vaccinated against psoriasis has been admitted to hospital with an allergy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X