For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

By BBC News தமிழ்
|

மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் , நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோ சிட்டியில் இடிந்து விழுந்த ஒரு கட்டடம்
AFP
மெக்சிகோ சிட்டியில் இடிந்து விழுந்த ஒரு கட்டடம்

நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன.

கட்டட இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்பு பணியாளர்கள் தேடி வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பாதி அளவு இடிந்த ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சிக்கியிருக்ககூடும் என்று செய்திகள் வந்துள்ள நிலையில், மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோரிலோஸ் மற்றும் புபலா மாநிலங்களில் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ள இந்த நிலநடுக்கம் 7.1 என்று ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

Close-up map of affected regions
BBC
Close-up map of affected regions

நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழும் மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் தெற்கு பகுதியில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குறைந்தது 90 பேர் உயிரிழந்தனர்.

மீட்பு பணியாளர்கள்
AFP
மீட்பு பணியாளர்கள்

1985-ஆம் ஆண்டுக்கு பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று அது வர்ணிக்கப்பட்டது.

அப்போது, மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். மக்களின் தொலைபேசிகளும் இயங்கவில்லை.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
A strong earthquake has struck central Mexico, killing more than 140 people and toppling dozens of buildings in the capital, Mexico City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X