For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பயமா இருக்கு" ... விமானத்தில் ஏறும் முன் மலேசிய பயணி வெளியிட்ட கடைசி நேர வீடியோ!

Google Oneindia Tamil News

பெடலிங் ஜெயா, மலேசியா: உக்ரைன்- ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த மலேசிய பயணி ஒருவர் வெளியிட்டுள்ள கடைசி நேர வீடியோ தற்போது படு வேகமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதுதான் அந்த விமானம் தொடர்பான கடைசிப் படமாகவும் அமைந்துள்ளது. விமானத்தில் பயணிப்பது குறித்து தனக்கு நடுக்கமாக உள்ளதாக அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

அவரது பெயர் முகம்மது அலி முகம்மது சலிம். விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த வீடியோவை எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் அவர் அப்லோட் செய்துள்ளார்.

ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்

ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்

ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானம், ரஷ்ய - உக்ரைன் எல்லையில் உக்ரைன் நாட்டுக்குள் வைத்து ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

295 பேர் பலி

295 பேர் பலி

இதில் 280 பயணிகள் 15 விமான ஊழியர்கள் பலியானார்கள். இந்த கொடூர தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.

கடைசி நேர காட்சிகள்

கடைசி நேர காட்சிகள்

இந்த நிலையில் அந்த விமானம் தொடர்பான கடைசி நேர வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

14 விநாடி வீடியோ

14 விநாடி வீடியோ

அந்த வீடியோ 14 விநாடிகளே ஓடுகிறது. இன்ஸ்டாகிராமில் இது அப்லோட் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது பொருட்களை சீட்டுகளுக்கு மேலே வைத்துக் கொண்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ளது.

கடவுளே பயமாக இருக்கிறது

கடவுளே பயமாக இருக்கிறது

அந்த வீடியோவை எடுத்த சலீம், கடவுளே, பயமாக, நடுக்கமாக இருக்கிறது என்று அதில் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் வலம்

பேஸ்புக்கில் வலம்

தற்போது இந்த வீடியோ யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வைரலாக பரவி வருகிறது.

கிளம்பப் போகிறோம்

கிளம்பப் போகிறோம்

இந்த வீடியோவில் பைலட்டின் குரலும் கூட பின்னணியில் கேட்கிறது. அதில், அவர், தற்போது நாம் கிளம்பத் தயாராகி விட்டோம். சரக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. அனைவரும் உங்களது செல்போன்களை ஆப் செய்யவும் என்று அந்தக் குரல் கூறும் பின்னணியில் வீடியோ முடிகிறது.

சைக்காலஜி மாணவர்

சைக்காலஜி மாணவர்

சலீம், ராட்டர்டாமில் உள்ள எரஸ்மஸ் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜியில் பிஎச்டி செய்து வந்தார். ஜோஹார் மாகாணத்தின் முவார் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

43 மலேசியர்கள் பலி

43 மலேசியர்கள் பலி

இந்த விபத்தில் 15 விமான ஊழியர்கள், 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 43 மலேசியர்களும் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The last glimpse of the downed Malaysia Airlines Flight MH17 was captured by Malaysian passenger Md Ali Md Salim moments before departure. The 14-second video, which was uploaded on his Instagram account, showed other passengers stowing their luggage in the overhead compartment. In the caption of the Instagram video, the 30-year-old seemed to have expressed his jitters flying home. "Bismillah... #hatiadasikitgentar (In the name of God... feeling a little bit nervous)", read the caption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X