For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“தேடுதல் செலவு மட்டும் 11 மில்லியன் டாலர்களுக்கு மேல்” - வரலாற்றில் இடம் பிடித்த மலேசிய விமானம்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத் தேடல் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

கடந்த மாதம் 8 ஆம் தேதி விண்ணில் பயணித்தபோது மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்எச்370 விமானம் தேடுதல் வேட்டையில் அதிக செலவு வைத்த நிகழ்வு என்ற வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் ஏர்பிரான்ஸ் விமானம் 447 தொடர்பாக இருவருட விசாரணையில் 54 மில்லியன் டாலர் தொகை செலவழிக்கப்பட்டதாம்.

MH370 Malaysian flight search expensive reached 11 million dollars...

இதுகுறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், மலேசிய அரசு உண்மைத் தகவல்களை வேண்டுமென்றே மறைத்துவருவதாகக் கூறியுள்ளார். மாயமான விமானம் குறித்து அரசு உண்மைத் தகவலைக் கூற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

அமெரிக்க கடற்படையில் இதுவரை 3.6 மில்லியன் டாலர்கள் தேடுதல் வேட்டைக்காக நிதி ஒதுக்கி இடத்தைக் கண்டறியும் பிஞ்சர் லொகேட்டர் நிறுவுதல், கடல் நீரின் அடியில் தேடுதல் வேட்டை, விமான கறுப்புப் பெட்டி கண்டறிதல் உள்ளிட்டவற்றுக்கு 3.3 மில்லியன் டாலர் செலவழித்துள்ளனர்.

இதில், எம்.எச்.370ஐத் தேடப் பயன்படுத்திய விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்டவற்றின் செலவும் அடங்கும்.வியட்நாம் தன் பங்குக்கு தென் சீனக் கடலில் தேட 8 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்துள்ளது.

English summary
World's more expensive search is Malaysian flight MH370 searching operation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X