For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மைக்கேல் ஜாக்சனின் ‘நெவர்லேண்ட்’ விற்பனைக்கு... விலை ஜஸ்ட் ரூ. 638 கோடி!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா : பாப் இசையின் மன்னர் என புகழப்படும் மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் கனவு இல்லம் ரூ. 638 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.

இசையுலகில் "கிங் ஆஃப் பாப்' யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடப் பதில் சொல்லி விடும் மைக்கேல் ஜாக்ஸன் என்று. அந்தளவிற்கு நாடு, மொழி, இனம் எல்லாம் கடந்து சர்வதேச அளவில் தனது துள்ளலான இசை, துடிப்பான நடனம் மூலம் ரசிகர்களைச் சேர்த்து வைத்துள்ளார் மைக்கேல் ஜாக்சன்.

தனது சிறுவயது முதலே மேடை நிகழ்ச்சிகளில் ஜொலிக்கத் தொடங்கினார் மைக்கேல் ஜாக்சன். இதனால், தனது பால்ய பருவ சந்தோஷங்களை இழந்த மைக்கேல் ஜாக்சன், அதனை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் கனவு மாளிகை ஒன்றை கட்டினார்.

நெவர்லேண்ட்...

நெவர்லேண்ட்...

கடந்த 1987ம் ஆண்டு 19.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு கலிபோர்னியா பள்ளத்தாக்கில் "பேண்டஸி மாளிகை' ஒன்றை அவர் உருவாக்கினார். 'நெவர்லேண்ட்' எனப் பெயரிடப்பட்ட அந்த மாளிகையை மிகப்பெரிய சிறுவர் பூங்கா என்றே கூறலாம்.

மினி ஜூ...

மினி ஜூ...

சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட அந்த மாளிகையில் சிம்பன்ஸி, மலைப்பாம்பு, மூன்று ஒட்டக சிவிங்கிகள், மான்கள், வாத்துக்கள், வரிக் குதிரைகள், நெருப்புக் கோழிகைளைக் கொண்ட "மினி ஜூ' இருந்தது.

குட்டி ரயில்...

குட்டி ரயில்...

அந்த வீட்டிற்குள்ளேயே சிறிய தியேட்டர் ஒன்றும் அமைக்கப் பட்டிருந்தது. மொத்த மாளிகையையும் வெளிப்புறமாகச் சுற்றி வர சிறிய ரயில் ஒன்றும் அங்கு உண்டு.

பாலியல் குற்றச்சாட்டு...

பாலியல் குற்றச்சாட்டு...

இந்தப் பிரம்மாண்டமான "பீட்டர் பேன்' மாளிகையில், மைக்கேல் ஜாக்சன் குழந்தைகளை அழைத்து வந்து விளையாடி மகிழ்ந்தார். ஆனால், அவ்வாறு விளையாட அழைத்துச் சென்ற தன் மகனை மைக்கேல் ஜாக்சன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்தார் தந்தை ஒருவர்.

திருமணம்...

திருமணம்...

இந்தப் பிரச்சினையில் தனக்கு உதவிய தோழி மேரி பிரஸியை இதே வீட்டில் வைத்து, 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மைக்கேல் ஜாக்சன். ஆனால், இரண்டாண்டுகளுக்கும் குறைவாகவே அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள்.

மாளிகை மூடப்பட்டது...

மாளிகை மூடப்பட்டது...

தான் ஆசையாக பார்த்து பார்த்துக் கட்டிய அந்த மாளிகையில் நான்கு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் மைக்கேல்ஜாக்சன். செலவுகளை சமாளிக்க முடியாமல் நெவர்லேண்ட் மாளிகை மூடப்பட்டது.

விற்பனைக்கு...

விற்பனைக்கு...

இந்நிலையில், தற்போது மைக்கேல் ஜாக்சனின் நெவர்லேண்ட் மாளிகை விற்பனைக்கு வந்துள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 638 கோடி ரூபாய் ஆகும்.

English summary
King of Pop Michael Jackson's former Neverland ranch estate in California has been put on the market for USD 100 million.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X