For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“மைக்கேல் ஷூமேக்கர் விரைவில் குணமடைவார்”- டாக்டர் கூறுகிறார்!

Google Oneindia Tamil News

பாரிஸ்: உலகின் பிரபல கார் பந்தய வீரரான ஷூமேக்கரின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார் அவருடைய மருத்துவர் ஒருவர்.

பிரபல பார்முலா ஒன் கார் பந்தய வீரரான மைக்கேல் ஷூமேக்கர் பிரெஞ்ச் ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு தலையில் படுகாயமடைந்தார். அவருக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை அளித்தவர் அந்த பிரெஞ்ச் மருத்துவர்.

அவர், ஷூமேக்கர் தொடர்ந்து கோமாவில் இருக்கப்போவதில்லை எனவும், இன்னும் 3 வருடங்களுக்குள் குணமாகிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை:

தொடர்ந்து சிகிச்சை:

"ஜீன் பிரான்காய்ஸ் பேயென்" என்ற அந்த மருத்துவர் கிரிநோபள் மருத்துவமனையில் ஷூமேக்கருக்கு அவர் படுகாயமடைந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதியில் இருந்து சிகிச்சை அளித்து வந்தவர்.

உடல்நிலை குறித்த தகவல்கள்:

உடல்நிலை குறித்த தகவல்கள்:

பின்னர் ஷூமேக்கரின் குடும்பம் அமைந்துள்ள சுவிட்சர்லாந்துக்குச் சென்று அவருடைய உடல்நிலை குறித்த தகவல்களைத் தெரிவித்துக் கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடரும் வாழ்க்கைப்பயணம்:

தொடரும் வாழ்க்கைப்பயணம்:

"தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பின்னரும் தொடரும் ஷூமேக்கரின் தன்னம்பிக்கை வாழ்க்கை" என்று அம்மருத்துவர் ஆர்டிஎல் ரேடியோவில் நேற்று தெரிவித்துள்ளார்.

குணமடைவார் ஷூமேக்கர்:

குணமடைவார் ஷூமேக்கர்:

கண்டிப்பாக அவர் ஒன்றிலிருந்து, மூன்று வருடங்களுக்குள் குணமாகி விடுவார் என்றும் தெரிவித்துள்ளார். "நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். ஆனால், அவருக்கும் முழுவதும் குணமாக கொஞ்சம் அவகாசம் தேவை" என்றும் தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக ஷூமேக்கரின் ரசிகர்களுக்கு இது இனிப்பான செய்திதான்!

English summary
A French physician, who treated Michael Schumacher for nearly six months after the Formula One champion struck his head in a ski accident, says he is no longer in a coma and predicted a possible recovery within three years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X