For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'டீ' சாப்பிட மகள்களுடன் லண்டன் கிளம்பி வந்த மிஷல் ஒபாமா

Google Oneindia Tamil News

லண்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல், தனது இரு மகள்களுடன் லண்டன் வந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் இங்கிலாந்து வந்துள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் தேனீர் விருந்தில் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மிஷலுடன் அவரது மகள்கள் மலியா, சாஷா ஆகியோரும் வந்துள்ளனர். இன்று அவர்கள் டவர்ஹேம்லட்ஸில் உள்ள மல்பெர்ரி பள்ளிக்குச் சென்று பள்ளிக் குழந்தைகளைச் சந்திக்கவுள்ளனர்.

அப்போது பெண் கல்விக்கான முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறார் மிஷல்.

தேநீர் விருந்து...

தேநீர் விருந்து...

அதன் பின்னர் இளவரசர் ஹாரியைச் சந்திக்கிறார் மிஷல். பின்னர் பிரதமர் டேவிட் காமரூன், அவரது மனைவி சமந்தாவை 10 டவுனிங் தெருவில் உள்ள வீட்டில் ஒபாமா குடும்பத்தினர் சந்திக்கின்றனர். அவர்களுக்கு தேனீர் விருந்தளித்துக் கெளரவிக்கிறார் பிரதமர் காமரூன்.

வரவேற்பு...

வரவேற்பு...

முன்னதாக லண்டன் வந்த மிஷல் குடும்பத்தினரை அங்கு வசிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் குடும்பத்தினர் உற்சாகமாக் வரவேற்றனர்.

கலக்கல் டிரஸ்...

கலக்கல் டிரஸ்...

வழக்கம் போல தனது டிரஸ்ஸில் கலக்கலாக வந்திருந்தார் மிஷல். தனது குழந்தைகளுக்குப் போட்டியாக அவர் போட்டிருந்த கவுன் பிரமாதமாக இருந்தது. அனைவரையும் கவர்வதாக இருந்தது. அதேசமயம் உறுத்தலாக இல்லை.

ரசிகர் கூட்டம்...

ரசிகர் கூட்டம்...

மிஷல் எப்போதுமே டிரஸ்ஸிங் சென்ஸ் அதிகம் உள்ளவர் என்பதால் அவர் எங்கு போனாலும் அவரது டிரஸ்ஸைப் பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கும். இந்த முறையும் அதில் எந்தக் குறையும் இல்லை.

க்யூட் மகள்கள்...

க்யூட் மகள்கள்...

தாயாரைப் போலவே மகள்கள் இருவரும் கூட க்யூட்டான டிரஸ்ஸில் வந்திருந்தனர்.

அடுத்து இத்தாலி...

அடுத்து இத்தாலி...

இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு மிஷலும், அவரது இரு மகள்களும் இத்தாலி செல்லவுள்ளனர். அங்கும் பெண் குழந்தைகள் கல்வி குறித்த பிரசாரத்தில் மிஷல் ஈடுபடவுள்ளார்.

அம்மா.. மகள்... பேத்திகள்...

அம்மா.. மகள்... பேத்திகள்...

இவர்களுடன் 77 வயதான மிஷலின் தாயார் மரியான் ராபின்சனும் வந்துள்ளார். மேலும் இந்த பயணத்தின்போது முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

மல்பெர்ரி பள்ளி...

மல்பெர்ரி பள்ளி...

மல்பெர்ரி பள்ளிக்கு ஏற்கனவே 2009ம் ஆண்டும் வந்துள்ளார் மிஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Three generations of First Lady's family arrived at London Stansted last night for two day tour of Britain
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X