For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முக்காடு அணியாத சர்ச்சை... டிவி காட்சிகளில் மிஷல் ஒபாமா உருவத்தை மங்கலாக்கவில்லை: சவுதி விளக்கம்

Google Oneindia Tamil News

ரியாத்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் உருவத்தை மங்கலாக்கி ஒளிபரப்ப செய்யவில்லை என சவுதி அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 66வது குடியரசு தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்தியப் பயணத்தை முடித்து, கடந்த செவ்வாயன்று ஒபாமா சவுதி புறப்பட்டுச் சென்றார்.

அங்கு சவுதி மன்னர் அப்துல்லாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்திய ஒபாமா, புதிய மன்னரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.

Michelle Obama’s face blurred by Saudi state television, although claim disputed

இந்த சந்திப்பு நடந்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட அந்நாட்டு அரசின் டிவி, வீடியா பதிவில் மிஷல் ஒபாமாவின் உருவத்தை மட்டும் மங்கலாக்கி ஒளிபரப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டுவிட்டரிலும் செய்தி பரவியது. சவுதி வந்த மிஷல் முக்காடு போடாததாலேயே அவர் உருவம் மங்கலாக்கப் பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக சவுதி அரேபிய தூதரக தகவல் தொடர்பு இயக்குநர் டிவிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், அவர், ‘அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷல் ஆகியோர் சவுதிக்கு வந்தது முதல், மன்னர் சல்மானை சந்தித்தது வரை அனைத்தும் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் மிஷல் உருவம் மங்கலாக்கப்படவில்லை. அவரை மன்னர் கைகுலுக்கி வரவேற்றது முதல் எந்த ஒரு காட்சியும் மங்கலாக்கப்படவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
First lady Michelle Obama’s face was reportedly blurred by Saudi state television Tuesday as she and the president met with new Saudi King Salman in Riyadh, although officials deny the claim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X