For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம ரத்தத்தை உறிஞ்சும் கொசுவின் ரத்தத்தை உறிஞ்சி ஆய்வு செய்யும் மைக்ரோசாப்ட் டிரோன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய ஆய்வில் இறங்கியுள்ளது. அதாவது கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த இந்த ஆய்வில் அது ஈடுபடடுள்ளது. கொசுக்களைப் பிடித்து அதன் ரத்தத்தை ஆய்வு செய்து அதில் நோயைப் பரப்பும் வைரஸ்கள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வின் முக்கிய அம்சமாகும்.

இதற்காக அது டிரோன்களை பயன்படுத்துகிறது. டிரோன்களும் சரி கொசுக்களும் சரி இரண்டும் ஒன்றுதான். இரண்டும் ஓயாமல் சுற்றிக் கொண்டே இருக்கும். கொசுக்கள் நோய்களைப் பரப்புகின்றன. ஆனால் டிரோன்கள் அதைச் செய்வதில்லை.

இந்த ஆய்வுத் திட்டத்துக்கு Project Premonition என்று பெயரிட்டுள்ளது மைக்ரோசாப்ட்.

Microsoft is using drones to predict disease outbreaks

கொசுவின் ரத்தம்...

இந்த ஆய்வின் கீழ், கொசுக்களின் ரத்தத்தை ஆய்வு செய்து அதில் நோய்களைப் பரப்பும் வைரஸ் இருக்கிறதா என்பதை ஆராய்வார்கள். மேலும் அந்த ரத்தத்தில் வேறு ஏதேனும் நோய்கலோ அல்லது நோய் பரப்பும் கிருமிகளோ இருக்கிறதா என்பதும் ஆய்வுக்குட்படுத்தப்டும்.

மைக்ரோசாப்டின் திட்டம்...

அதன் மூலம் இத்தகைய கிருமிகளை பரப்பும் கொசுக்களையும், நோய்களையும் கட்டுப்படுத்தும் வழியை எளிதா கண்டறியலாம் என்பது மைக்ரோசாப்ட்டின் திட்டமாகும். இதற்காக அது டிரோன்களை ஏவி கொசுக்களை பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

சோதனை...

கடந்த மார்ச் மாதம் இதுதொடர்பான ஆய்வு கிரெனடாவில் நடந்தது. டிரோன்களை வைத்து எந்த அளவுக்கு கொசுக்களை மடக்கலாம் என்ற சோதனை அங்கு நடந்தது.

டிரோன்கள்...

இதற்காக பிரத்யேகமாக டிரோன்களை அது உருவாக்கவில்லை. மாறாக ஏற்கனவே உள்ள டிரோன்களையே மாற்றி பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

கம்யூட்டர் கட்டமைப்புகள்...

இதுபோன்ற வேலைகளில் டிரோன் போன்றவற்றை பயன்படுத்துவது சாதாரணமானதல்ல. பல்வேறு வகையான ஒருங்கிணைப்புகள் தேவைப்படும். மேலும் சூழலைப் புரிந்து கொள்ளும் வகையிலான கம்ப்யூட்டர் கட்டமைப்பும் தேவை்படும். இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

உலகம் முழுவதும்...

இந்த டிரோன் திட்டமானது வெற்றிகரமாக அமைந்தால். கொசுக்களைப் பிடித்து அதை பகுத்தாய்ந்து நோய்களைப் பரப்பும் கொசுக்களைக் கண்டறிந்து நோய்களைக் கட்டுப்படுத்துவது உலகம் முழுவதும் பரவலகாக்கப் படும் என்று கூறுகிறார் இந்த ஆய்வுடன் தொடர்புடைய பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஜேம்ஸ் பிபாஸ்.

கூடிய விரைவில் நமது தலைக்கு மேல் நிறைய டிரோன்கள் பறக்கப் போகிறது. அத்தனையும் கொசுக்களைப் பிடிக்கும் டிரோன்களாகவும் இருக்கலாம்.

English summary
Drones and mosquitoes have a lot in common: they both buzz around and annoy, and both can draw blood. But while mosquitoes spread disease, Microsoft is trying to teach drones to fight epidemics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X