For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேஸ்புக், வாட்ஸ் ஆப்பை இனி மனதின் மூலம் இயக்கலாம்.. தெறிக்கவிடும் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம்

நாம் மூளையில் நினைப்பதன் மூலம் அப்ளிகேஷனை செயல்பட வைக்கும் தொழில்நுட்பத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் உரிமை கோரியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இனி மூளை மூலம் மொபைல் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்த முடியும்

    நியூயார்க்: சில நாட்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனம் மூளை மூலம் கணினியின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை வாங்கியது. இதை பேஸ்புக் நிறுவனம் பெரிய புரட்சியாக பார்த்தது.

    இந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் மூளை மூலம் மொபைலில் இருக்கும் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்தும் தொழில்நுடபத்திற்கு காப்புரிமை வாங்கியுள்ளது. ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்த இந்த காப்புரிமை கோரப்பட்டுள்ளது.

    இது மொபைல் உலகில் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது செயல்படும் முறையே வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.

    காப்புரிமை

    காப்புரிமை

    மூளையில் நாம நினைப்பதன் மூலம் இனி மொபைலை இயக்க முடியும். போன் செய்வது தொடங்கி அனைத்திற்கும் மூளையில் நினைத்தால் போதும். இந்த 'மைண்ட் கண்ட்ரோல்' தொழில்நுடபத்திற்கு தற்போது மைக்ரோசாப்ட் காப்புரிமை வாங்கியுள்ளது.

    செயல்பாடு எப்படி

    செயல்பாடு எப்படி

    இது 'எலக்ட்ரோ என்செபலோகிராம்' என்ற தொழில்நுட்பம் மூலம் செயல்படுகிறது. இது நமது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கவனமாக கருத்தில் கொள்ளும். அதை வைத்து நாம் என்ன நினைக்கிறோம் என்பதை கண்டுபிடித்து அனைத்து வேலைகளையும் எளிதாக செய்யும். இன்னும் சில மாதங்களில் இது நடைமுறைக்கு வரும்.

    என்ன செய்ய முடியும்

    என்ன செய்ய முடியும்

    நாம் எதை பார்த்தாலும் அதுகுறித்து மனதில் ஒன்று நினைப்போம். அதனால் நாம் யாருக்காவது கால் செய்ய வேண்டும் என்று மொபைலை ஓபன் செய்து நினைத்தால் கால் தானாகவே செல்லும். அதேபோல் பேஸ்புக்கில் லைக் இடுவது, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்புவது எல்லாமே மனதில் நினைத்தபடியே செய்யலாம்.

    பயிற்சி அளிக்க வேண்டும்

    பயிற்சி அளிக்க வேண்டும்

    இதற்கு மிக முக்கியமாக பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்ப கருவி ஒன்றை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. அதற்கு நாம் எப்படி எல்லாம் மனதில் நினைப்போம் என்று பழக்கப்படுத்தினால் போதும் அதுவே சில நாட்களில் நாம் சொல்வதை எல்லாம் கேட்க தொடங்கிவிடும்.

    English summary
    Microsoft patents for controlling application using mind technology. From this technology we can control any application using our mind. Just by thought we can change anything in the application.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X