For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடங்கியது ஜி20 மாநாடு.. குலுங்கியது பியூனஸ் அயர்ஸ்.. நிலநடுக்கத்தால் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி 20 உச்சி மாநாடு தொடங்கிய நிலையில் அங்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. தலைநகரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. 13வது ஜி 20 உச்சி மாநாடு தொடங்கிய சில நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Mild earthquake hits Buenos Aires outskirts moments after G20 Summit inauguration

நிலநடுக்கத்தை லா பிளாட்டா என்ற பகுதியில் மக்கள் பெருமளவில் உணர்ந்தனர். இது பியூனஸ் அயர்ஸுக்கு தெற்கில் உள்ள நகரமாகும். இதேபோல துர்தரா, பெராஜடேகுய், குயில்மஸ், பிளாரன்ஸ் வரேலா ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது.

நிலநடுக்கத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. லா பிளாட்டா பகுதியில் சில வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இமயமலையில் 8.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு.. 15 மீட்டர் சரியலாம்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை இமயமலையில் 8.5 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு.. 15 மீட்டர் சரியலாம்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜி 20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The National Institute of Seismic Prevention, Argentina, reported a mild earthquake measuring 3.8 on the Richter Scale 21 kilometres south of the Argentinian capital moments after the thirteenth edition of the G20 Summit kicked off on Friday, November 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X