For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘இந்த’ வீடியோவை எப்டி எடுத்திருப்பாங்க.. உங்களுக்கு ஏதாவது புரியுதா?

Google Oneindia Tamil News

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ, இன்ஸ்ட்ராகிராம் உலகையே திக்குமுக்காட செய்துள்ளது.

அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தை சேர்ந்தவர் ஷான் ரேஷோர். இவர் தனது சகோதரருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு சென்றார். சென்றவர்கள் சும்மா இல்லாமல், அங்குள்ள கண்ணாடி ஒன்றின் முன்பு நின்று வீடியோ ஒன்றை எடுத்து, இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டனர்.

அவ்வளவு தான். அந்த வீடியோ பார்த்து, உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் மூளையை போட்டு கசக்சிக்கொண்டிருக்கின்றனர். இந்த வீடியோவை இவர்கள் எப்படி எடுத்திருப்பார்கள் என்ற கேள்வி தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

டிவி சீரியலில் நல்லது கூட காட்டுறாங்களே.. சந்தோஷைப் பார்த்து திருந்துங்க சபலிஸ்ட்டுகளே! டிவி சீரியலில் நல்லது கூட காட்டுறாங்களே.. சந்தோஷைப் பார்த்து திருந்துங்க சபலிஸ்ட்டுகளே!

கண்ணாடி வீடியோ:

கண்ணாடி வீடியோ:

அந்த வீடியோவில், ஷான் ஒரு கண்ணாடி முன்பு இருக்கிறார். கேரமா படிப்படியாக சூம்அவுட் ஆகி வெளியே வரும் போது, ஒரு கண்ணாடி நான்கு கண்ணாடிகளாக தெரிகின்றன. கடையில் ஷான் தனியாக கேரமா பின்பு நிற்பது போல் இருக்கிறது.

குழப்பம்:

குழப்பம்:

இதை பார்த்த சிலர், இரட்டையர்கள் சேர்ந்து இந்த வீடியோவை எடுத்துள்ளனர் எனவும், மற்ற சிலர் இது ஒரு மேஜிக் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ குறித்து மேலும் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இது தான் சீக்ரெட்:

இது தான் சீக்ரெட்:

ஆனால் அவர்கள் அனைவரின் கருத்துகளையும் நிராகரித்துள்ள ஷான், தாங்கள் எந்த தந்திரமும் செய்யவில்லை என்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, தான் ஒரு கண்ணாடியில் கையை வைத்து சாய்ந்து இருக்கும் போது, தனது சகோதரர் எதிர்திசையில் உள்ள கண்ணாடி வழியாக படம் பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

கண்ணாடி பிம்பங்கள்:

கண்ணாடிகள் பிம்பங்கள் தான், தான் மேகராவுக்கு முன்னாடி இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் அந்த வீடியோ பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. முடிந்தால் நீங்களும் அந்த வீடியோவை பார்த்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

English summary
A two youngsters from America who are brothers, made a illusion video and is viral now in the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X