For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தவறான விளம்பரத்தைப் பரப்பும் கோகோ கோலா – விரைவில் விசாரணை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் கோகோ கோலா நிறுவனம் தவறான விளம்பரத்தை பரப்பிய காரணத்தால் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாக உள்ளது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பிரபல குளிர்பான நிறுவனம் கோகோ கோலா ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பான மினிட் மெய்டில் சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ள மாதுளை மற்றும் நெல்லிக்காயை விளம்பரத்தில் பிரதானமாகக் குறிப்பிட்டதாக சமீபத்தில் ஒரு புகார் வெளிவந்தது.

‘Misleading’ juice label may land Coca-Cola in court

தங்களுடைய குளிர்பானத்தில் 85 சதவிகிதம் மாதுளை சாறும், 15 சதவிகிதம் நெல்லி சாறும் கலந்துள்ளதாகவும் ஆனால் கோகோ கோலாவில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தச்சாறுகள் உள்ளன என்றும் அமெரிக்காவின் மற்றொரு குளிர்பான நிறுவனம் " பொம்" தங்களது புகாரில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் தவறான விளம்பரம் மூலம் கோகோ கோலா வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றது என்பதும் பொம் நிறுவனத்தின் புகார்.

இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி கென்னடி, கோகோ கோலாவின் தயாரிப்பில் 99.4 சதவிகிதம் ஆப்பிள் மற்றும் திராட்சை பழ சாறும் 0.5 சதவிகிதமே மாதுளை மற்றும் நெல்லி சாறும் கலந்துள்ளது என்று தெரிவித்தார்.

மினிட் மெய்ட் பழச்சாறு விளம்பரத்தில் சிறிய எழுத்துகளில் கோகோ கோலா ஐந்து பழச் சுவைகளின் கலவை என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் பொம் வொண்டர்புல் நிறுவனம், கோகோ கோலா நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அனுமதிப்பதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

English summary
Coca-Cola could face a trial over allegations of false advertising, after the US supreme court said that the company sought to "mislead and trick consumers" by labelling as pomegranate-blueberry juice a product that contains just 0.5 per cent pomegranates and blueberries combined.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X