For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடச் சொன்ன மாணவன் சஸ்பெண்ட்... மிஸ்.அமெரிக்கா கண்டனம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: தான் பங்கேற்ற பள்ளி விழாவில் தன்னை ஆடச் சொல்லி கேட்டுக் கொண்ட மாணாவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் மிஸ். அமெரிக்க அழகி நினா.

மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்ற அமெரிக்க வாழ் இந்தியர் நினா டவுலூரி, பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளி விழாவில் பங்கேற்றார். மாணவர்கள் மத்தியில் கலாசார வேற்றுமை, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடத்தின் முக்கியத்துவம் குறித்து அங்கு பேச திட்டமிருந்தார் நினா.

அதற்கு முன்னதாக, மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்த நினாவை நடனமாடச் சொல்லி மாணவர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.

பாட்ரிக் பார்வெஸ் (18) என்ற மாணவன் ஏற்கனவே தான் இவ்வாறு செய்ய இருப்பதாக பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி வேண்டியிருந்தான். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். ஆனபோதும், அழகி நினாயை மேடையில் நடனமாடும்படி வலியுறுத்தி நிகழ்ச்சியின் போது மேடைக்கு சென்று அவரிடம் பிளாஸ்டிக் பூ ஒன்றை பரிசளித்தான் மாணவன் பாட்ரிக்.

Miss America to defence of teen who asked her for a dance

பாட்ரிக்கின் இச்செயலால் அழகி நினா கோபம் அடையவில்லை. மாறாக சிரித்து சமாளித்தார். அதை பார்த்து சக மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஆனால் மாணவரின் இச்செய்கையால் எரிச்சலைடைந்த பள்ளி நிர்வாகம், பாட்ரிக்கை பள்ளியில் இருந்து 3 நாட்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

பள்ளியின் இந்த உத்தரவைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அழகி, சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். அதில், மாணவர்களை ஊக்குவிப்பது தான் என் வேலை, மாறாக அவர்களுடைய வீழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்க விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The first ever Indian-American Miss America, Nina Davuluri, has come to the defence of a teen who asked her to a dance as the news of his suspension for the stunt reached the White House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X