For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ் இஸ்ரேலுடன் செல்பியா?.. நாட்டை விட்டு வெளியேறு.. மிஸ் ஈராக்கிற்கு கொலை மிரட்டல்

மிஸ் இஸ்ரேலுடன் செல்பி எடுத்த காரணத்தால் மிஸ் ஈராக் பட்டம் வென்ற பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பாக்தாத்: மிஸ் இஸ்ரேல் பட்டம் வென்ற பெண்ணுடன் செல்பி எடுத்த காரணத்தால் மிஸ் ஈராக் பட்டம் வென்ற பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மிஸ் ஈராக் பட்டம் பெற்ற சாரா இடான் என்ற பெண்ணை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் பலர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

தற்போது இந்த பிரச்சனை பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. ஒரு செல்பி இந்த அளவிற்கு கொலை மிரட்டல் விட வைக்கும் என நினைக்கவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மிஸ் இஸ்ரேல் பட்டம் பெற்ற அடார் கெண்டேல்ஸ் மேன் என்ற பெண்ணும் கருத்து கூறியுள்ளார். அதேசமயத்தில் பலர் இருவருக்கும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வைரலான செல்பி

சென்ற மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் ஈராக் பட்டத்தை சாரா இடான் என்ற தட்டிச்சென்றார். அதேபோல் மிஸ் இஸ்ரேல் பட்டத்தை அடார் கெண்டேல்ஸ் மேன் என்ற பெண் வாங்கினார். இந்த நிகழ்வு முடிந்த பின் இருவரும் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த செல்பி வெளியான சில நிமிடத்தில் வைரல் ஆனது.

கொலை செய்யப்படுவார்

கொலை செய்யப்படுவார்

இந்த செல்பியை பார்த்த ஈராக் கிளர்ச்சிப்படை, மிஸ் ஈராக் சாரா இடானை கொலை செய்ய போகிறோம் என்று கூறியது. மேலும் அந்த பெண்ணின் பட்டத்தை பறித்து உடனடியாக நாட்டைவிட்டு அந்த பெண்ணை துரத்துவோம். அப்படி அந்த பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியவில்லை என்றால் உடனே கொலை செய்வோம் என்று குறிப்பிட்டனர். எங்களுக்கு எப்போதும் இஸ்ரேல் எதிரிதான் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

பதிலடி கொடுத்தார்

தற்போது இந்த சம்பவம் குறித்து மிஸ் ஈராக் சாரா இடான் பதில் அளித்து உள்ளார். அதில் "தனி மனித சுதந்திரம் பறிக்கப்படும் முதல் நபரும் கடைசி நபரும் நான் இல்லை. ஈராக்கில் பல பெண்கள் இப்படித்தான் பயந்து கொண்டு வாழ்கிறார்கள். ஈராக் பெண்களுக்கு விடுதலை வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மிஸ் இஸ்ரேலின் பதில்

மிஸ் இஸ்ரேலின் பதில்

இந்த சம்பவம் குறித்து மிஸ் இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ''அவர்கள் இப்போதும் என்னுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எல்லோரும் ஒன்றாக அமைதியாக வாழ முடியும் என்பதை நிரூபிக்கவே நாங்கள் இப்படி செல்பி எடுத்தோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Miss Iraq's has forced to leave country after selfie with Miss Israel. Both Miss Iraq Sarah Idan and Miss Israel Adar Gandelsman replies to the thread made by anti israel groups in their twitter account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X