For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபஞ்ச அழகி பட்டம்.. டாப் 20-இல் தேர்வாகாததால் வாய்ப்பை நழுவ விட்ட இந்திய அழகி

Google Oneindia Tamil News

பாங்காக்: இந்தியாவைச் சேர்ந்த நேஹல் சுடாஸ்சமா பிரபஞ்ச அழகிக்கான சுற்றுகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறாததை அடுத்து அவர் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

2018-ஆம் ஆண்டுக்கான 67-ஆவது பிரபஞ்ச அழகி போட்டி தாய்லாந்தில் உள்ள நான்தாபுரியில் நடைபெற்றது. இதில் நேற்று இரவு இறுதிச் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்றன.

Miss universe: India’s Nehal Chudasama Fails to Make it to Top 20

இதில் பிரபஞ்ச அழகியாக பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த கேட்ரியோனா கிரே தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். 2-ம் இடத்தைத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டமாரின் கிரீனும், 3-வது இடத்தை வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி கட்டர்ஸும் பெற்றனர்.

இந்த போட்டியில் 94 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் சார்பில் மும்பையை சேர்ந்த நேஹஸ் சுடாஸ்சமா (22) கலந்து கொண்டார். அவர் அரையிறுதி போட்டியில் முந்தைய சுற்றில் வெளியேற்றப்பட்டார்.

அதாவது ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கோஸ்டா ரிக்கா, குராகுவா, கிரேட் பிரிட்டன், ஹங்கேரி, இந்தோனேஷியா, அயர்லாந்து, ஜமைக்கா, நேபாள், பிலிப்பின்ஸ், போலாந்து, பியூர்டோ ரிகோ, தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, வெனின்சுலா, வியட்நாம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் முதல் 20 இடங்களை பிடித்தனர்.

அவர்களில் ஒவ்வொரு பகுதிகளிலிருந்து 5 பேர் அரையிறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். டாப் 20-இல் மும்பை அழகி தேர்வாகாததால் அவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை தவறவிட்டார்.

English summary
India's Nehal Chudasama failed to make it to the Top 20 shortlist at the Miss Universe 2018 contest in Bangkok.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X