For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக இண்டர்நெட் சேவை முடக்கம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே மாதத்தில் 3-வது முறையாக சில மணி நேரம் செல்போன் - இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டன.

இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி புர்கா மதகுரு என அறியப்படும் மவுலானா அப்துல் அஜிஸ், இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால், இஸ்லாமாபாத் நகரில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது.

Mobile phone service suspended in pakistan

எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட ரெஸ்ட் மாஸ்க் மசூதியைச் சுற்றி 2 கி.மீ. சுற்றளவிற்கு இன்று செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை இந்த தடை நீடித்ததாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வப்போது செல்போன் மற்றும் இண்டர்நெட் சேவைகளை முடக்கி அந்நாட்டு உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த ஒரு மாத காலத்தில் இஸ்லாமாபாத்தில் மூன்றாவது முறையாக செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Mobile phone and internet service suspended in pakistan for security purpose
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X