For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் பயன் படுத்தினால் கேன்சர் வரும்... ஷாக் தரும் ஆய்வு!

Google Oneindia Tamil News

லண்டன் : செல்போன்கள் பயன்படுத்துவதால் வள்ர்சிதை மாற்றங்கள், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செல்போன் மற்றும் அதன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுகளால் மனிதர்களுக்கு ஆபத்து என்று ஒரு சாராரும், இல்லை என மற்றொரு சாராரும் தொடர்ந்து ஆய்வுகள் மூலம் சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் செல்போன் பயன்படுத்துவதால் உடல் செல்களில் மாற்றம் ஏற்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கேன்சர் அபாயம்...

கேன்சர் அபாயம்...

ஜெர்னல் எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் என்ற பத்திரிக்கையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், செல்போன் கதிர்வீச்சுக்களால் புற்றுநோய் மட்டுமின்றி வளர்சிதை மாற்றங்கள் உட்பட மேலும் பல நோய்கள் ஏற்படவும் செல்போன்கள் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுவாசக் கோளாறு...

சுவாசக் கோளாறு...

மேலும், முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகின்றது.

பாதிப்பு...

பாதிப்பு...

செல்போனிலிருந்து வெளிவெரும் கதிர்வீச்சுக்களால் உடல் செல்களில் மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதன் மூலம் புற்றுநோய் மட்டுமின்றி தொடர் தலைவலி, உடல்சோர்வு, தோல் வியாதிகள் போன்றவைகளும் வருகிறது என்கிறது.

எச்சரிக்கை...

எச்சரிக்கை...

இந்த பாதிப்புகள் தற்காலிகமானது அல்ல எனக் கூறும் இந்த ஆய்வு, இவை நீண்ட நாளைய பாதிப்புகளாக மாறவும் வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றது. மேலும் இந்த ஆய்வில் மொபைல் போன் மட்டுமின்றி வயர்லெஸ் இன்டர்நெட் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயர்லெஸ் இன்டர்நெட்...

வயர்லெஸ் இன்டர்நெட்...

ஏற்கனவே, கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச புற்றுநோய் ஆய்வுக்கழகம் நடத்திய ஆய்விலும் கதிர்வீச்சுக்களால் தான் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A metabolic imbalance caused by radiation from your wireless devices could be the link to a number of health risks, such as various neurodegenerative diseases and cancer, says a study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X