For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா தடுப்பூசிகள் மரபணுக்களை மாற்றிவிடும்- 500 டோஸ்களை அழித்த யு.எஸ். மருந்தாளுநர் வாக்குமூலம்

Google Oneindia Tamil News

விஸ்கான்சின்: மரபணுக்களை மாற்றக் கூடிய தன்மை கொண்டவை கொரோனா மாடர்னா (மாடெர்னா) தடுப்பூசி என்பதால் அவற்றை நாசமாக்கியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட மருந்தாளுநர் ஸ்டீவன் பிராண்டென்பர்க் (Steven Brandenburg) திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனா பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 2,15,79,641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Moderna vaccine will change human DNA, says arrested US pharmacist

கொரோனாவால் மட்டும் இதுவரை 3,65,664 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் போட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் அரோரா மருத்துவ மையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மாடர்னா கொரோனா தடுப்பூசிகளை நாசமாக்கியதாக மருந்தாளுநர் ஸ்டீவன் பிராண்டென்பர்க் அண்மையில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 500 தடுப்பூசிகளை அவர் பயன்படுத்தமுடியாத வகையில் நாசமாக்கினார் என்பது புகார்.

 தடுப்பூசி அளிக்கும் பணிகளில் பாதிப்பு... 500 தடுப்பூசி டோஸ்களை வீணாக்கியவர் அமெரிக்காவில் கைது தடுப்பூசி அளிக்கும் பணிகளில் பாதிப்பு... 500 தடுப்பூசி டோஸ்களை வீணாக்கியவர் அமெரிக்காவில் கைது

ஸ்டீவன் பிராண்டென்பர்க்கிடம் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். மாடர்னா கொரோனா தடுப்பூசி, மனிதர்களின் மரபணுவையே மாற்றிவிடக் கூடிய தன்மை கொண்டது; அதைபோட்டுக் கொள்வதால் ஆபத்து என நினைத்து நாசமாக்கியதாகவும் ஸ்டீவன் கூறியுள்ளார்.

English summary
US pharmacist Steven Brandenburg who was arrested for destroyed 500 doses of Moderna vaccine said that they would change human DNA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X