For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் ஆபீஸ் சென்ற மோடி.. சமூக வலைத்தள தாக்கம் பற்றி கலகல பேச்சு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிலிக்கான்வேலி: மக்களின் நேரத்தை மிச்சப்படுத்த வந்த டெக்னாலஜியில் இப்போது மக்கள் நேரத்தை செலவிடுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சிலிக்கான்வேலியிலுள்ள பேஸ்புக் தலைமை அலுவலகம் சென்ற மோடி, டவுன்ஹாலில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, பேஸ்புக் தலைவர் மார்க் ஜுகர்பர்க், மோடியுடன் அமர்ந்து உரையாடினார்.

Modi at Google head office: Modi talks about how technology is affecting our lives

அப்போது, சோஷியல் மீடியாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த மோடி, பெற்றோர் பற்றி பேசியபோது கண் கலங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அருகிலுள்ள கூகுள் தலைமை அலுவலகத்திற்கு மோடி சென்றார்.

கூகுள் தலைமை அலுவலகத்தில் அதன் சி.இ.ஓவும், தமிழருமான சுந்தர் பிச்சை, மோடியை வரவேற்று அலுவலகம் உள் அழைத்துச் சென்று அலுவலகத்தை சுற்றி காண்பித்து விளக்கம் கொடுத்தார்.

இதையடுத்து சுமார் ஆயிரம் பேர் குவிந்திருந்த அரங்கத்தில் மோடி கூறியதாவது: தினமும் 15 மணி நேரத்தை கம்ப்யூட்டர் முன்பாக செலவிட்டு நீங்கள் தீர்வுகளை கண்டுபிடிக்கிறீர்கள். இதற்காக இந்தியர்கள் சார்பில் உங்களுக்கு (கூகுள் ஊழியர்) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தை பால் கேட்டால்கூட, வாட்ஸ்சப்பில் மெசேஜ் அனுப்புகிறேன். கொஞ்சம் பொறு என்று கூறும் நிலைமை இந்தியாவில் வந்துவிட்டது. நேரத்தை மிச்சம்பிடிக்க டெக்னாலஜி உதவும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. டெக்னாலஜியில்தான் மக்கள் நேரத்தை செலவிடுகிறார்கள்.

ஆனால் டெக்னாலஜி அரசாட்சியை எளிமையாக்கியுள்ளது. கூகுள் டெக்னாலஜி, இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு மோடி தெரிவித்தார்.

முன்னதாக பேசிய, கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை "முதல்கட்டமாக கூகுள் சார்பில், 100 இந்திய ரயில் நிலையங்களில் ஹை-ஸ்பீட் வைஃபை இணையதளம் வசதி செய்துதரப்படும். இதில் வீடியோக்களைகூட விரைவாக பார்க்க முடியும். மேலும் 400 ரயில் நிலையங்களுக்கு அடுத்த ஆண்டு வைஃபை வசதி செய்து தரப்படும். 11 இந்திய மொழிகளில், ஆண்ட்ராய்டு இயங்குதளம் இயங்கும் வகையில் அப்கிரேட் செய்யப்படும்" என்றார்.

English summary
PM Modi talks about how technology is affecting our lives today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X