For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு! இருதரப்பு நல்லுறவு மாநாட்டில் இன்று மோடி பங்கேற்பு

ஜப்பான் மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு! இருதரப்பு நல்லுறவு மாநாட்டில் இன்று மோடி பங்கேற்பு

Google Oneindia Tamil News

டோக்கியோ: இந்திய - ஜப்பான் இரதரப்பு நல்லுறவு மாநாட்டில் பங்கேற்பதற்காக டோக்கியோவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு மன்னருடன் சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலைஅங்கு நடைபெறவுள்ள இருதரப்பு நல்லுறவு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Modi calls on Japanese Emperor

ஜப்பான் மன்னருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவாரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருதரப்பு நல்லுறவு மேம்பாடு குறித்தும், ஆசிய நாடுகளின் எதிர்கால நலன் தொடர்பாகவும் கலந்தாலோசித்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வியாழன்று டோக்கியோ சென்றடைந்தார். இன்று மாலை ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபேவுடன் இரு தரப்பு நல்லுறவு மாநாட்டில் பங்கேற்கிறார்.

அதற்கு முன்பாக இரு நாடுகளுக்கு இடையிலான இரு வர்த்தக மாநாடுகளில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். அப்போது அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பிரதமர் மோடியும் ஜின்சோ அபேவும் சிங்கன்சன் என்னும் அதி விரைவு ரயிலில் பயணிக்க திட்டமிட்டுள்ளனர்.

English summary
Tokyo/New Delhi: Ahead of the annual India-Japan bilateral summit later in the day, Prime Minister Narendra Modi called on Japanese Emperor Akihito here on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X