For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி

சீன சென்று இருக்கும் பிரதமர் மோடி எல்லை பிரச்சனை குறித்தும், சர்வதேச அரசியலில் ஆசிய நாடுகளின் முக்கியத்துவம் குறித்தும், டோக்லாம் பிரச்சனை குறித்தும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசி உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஷாங்காய் மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி

    பெய்ஜிங்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்று இருக்கிறார். தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்புக்கான மாநாட்டில் கலந்து கொள்ள மோடி சீனா சென்றுள்ளார்.

    Modi goes to China for the second time in this year

    இன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் சந்திக்க உள்ளனர். சென்று முறை சீனாவில் இருக்கும் முக்கிய அருவிகளும், ஏரிகளையும் மோடி பார்வையிட்டார். அதேபோல் சீனாவில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளையும் பார்வையிட்டார். இந்த முறை சில முக்கிய இடங்களை பார்வையிட உள்ளார். அதன்பின் ஜி ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.

    இந்த சந்திப்பில் இந்திய சீனா எல்லைப்பிரச்சனை குறித்து பேசப்படஇருக்கிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் சண்டையிட்டுக் கொள்வது குறித்தும், டோக்லாம் பகுதியில் சீனா எல்லை மீறுவது குறித்தும் இதில் விவாதம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களின் வர்த்தகம் குறித்தும் இதில் பேசப்பட இருக்கிறது.

    இந்த மாநாட்டிற்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களையும் மோடி சந்தித்து உரையாடுவார் என்று கூறப்படுகிறது.

    English summary
    Prime Minister Narendra Modi departs for China's Qingdao to attend the 18th Shanghai Cooperation Organisation (SCO) summit .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X