For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டைம் இதழின் இந்த ஆண்டின் சிறந்த மனிதர் பட்டியலில் மோடி முன்னிலை !

2016- ம் ஆண்டின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

நியூயார்க்: பிரபல ஆங்கில இதழான ''டைம்'' நடத்தி வரும் 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளிய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

அமெரிக்காவில் வெளிவரும் ஆங்கில வார இதழான 'டைம்' சார்பில் ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய நிகழ்வுகளிலும் செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு செலுத்திய நபரை தேர்வு செய்து டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருகிறது.

 Modi leads Trump, Putin in Time's 'Person of the Year' poll

அந்த வகையில் 'பர்ஸன் ஆஃப் தி இயர்' என்ற தலைப்பில் 2016-ம் ஆண்டுக்கான செல்வாக்கான நபரை தேர்வு செய்ய முதல்கட்டமாக வாசகர்கள் மத்தியில் இணைய வழியாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போதிய நிலவரப்படி 21% வாக்குகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

மோடிக்கு அடுத்த இடத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே 10 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 7 சதவீத வாக்குகளுடன் 3-வது இடத்திலும், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் ஆகியோர் தலா 6 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பின் இறுதி முடிவுகளை டைம் பத்திரிக்கை டிசம்பர் 4-ம் தேதி வெளியிடும்.
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வாகி இருந்தார். 2014-ம் ஆண்டின் செல்வாக்கான நபராக டைம் பத்திரிக்கை நரேந்திர மோடியைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi is leading an online poll of readers' choice for Time magazine's 'Person of the Year' in 2016 honour, which has contenders like US President-elect Donald Trump, the outgoing US leader Barack Obama and Russian President Vladimir Putin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X