For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடே சில்லரைக்கு அலையும்போது, ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சீறி பறந்த மோடி!

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுடன் புல்லட் ரயிலில் பயணித்து மகிழ்ந்தார்.

Google Oneindia Tamil News

டோக்கியோ: வருடாந்திர இருதரப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோபேவுக்கு சின்கன்சன் புல்லட் ரயிலில் ஏறிச் சென்றார்.

இரு நாட்டுத் தலைவர்களும் புல்லட் ரயிலில் ஏறிச் சென்றது அங்குள்ள மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Modi leaves for Kobe aboard bullet train in Tokyo

இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு புல்லட் ரயில் வேகத்தில் வளர்ந்து வருவதைக் குறிப்பிடுவதாக இந்திய வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவாரூப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் ஷின்சோ அபேவும் கோபேவுக்கு புல்லட் ரயிலில் பயணித்தது குறித்த மற்றொரு பதிவில், இந்த விநோத ரயில் பயணம் சிறந்த நட்புக்கு அடையாளமாக திகழ்கிறது என்று விகாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு தலைவர்களும் புல்லட் ரயிலில் உடன் செல்லும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

English summary
Tokyo: Prime Minister Narendra Modi, who is meeting his Japanese counterpart Shinzo Abe for the annual India-Japan bilateral summit, arrived at Tokyo Station to board the Shinkansen bullet train on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X