For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லை பிரச்சனை முதல் உலகரசியல் வரை விவாதம்.. சீன அதிபரை சந்தித்தார் பிரதமர் மோடி!

சீனா சென்று இருக்கும் பிரதமர் மோடி எல்லை பிரச்சனை குறித்தும், சர்வதேச அரசியலில் ஆசிய நாடுகளின் முக்கியத்துவம் குறித்தும், டோக்லாம் பிரச்சனை குறித்தும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசி உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனா சென்று இருக்கும் பிரதமர் மோடி எல்லை பிரச்சனை குறித்தும், சர்வதேச அரசியலில் ஆசிய நாடுகளின் முக்கியத்துவம் குறித்தும், டோக்லாம் பிரச்சனை குறித்தும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேசி உள்ளார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்று இருக்கிறார்.தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்புக்கான மாநாடு நடக்க உள்ள சமயத்தில் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

Modi meets Chinas President Xi Jinping in Hubei Provincial Museum

இன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் சந்தித்தனர். சீனாவில் இருக்கும் முக்கிய அருவிகளும், ஏரிகளையும் மோடி பார்வையிட்டார். அதேபோல் சீனாவில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளையும் பார்வையிட்டார். பின் ஜி ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பில் இந்திய சீனா எல்லைப்பிரச்சனை குறித்து பேசப்பட்டு இருக்கிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் சண்டையிட்டுக் கொள்வது குறித்தும், டோக்லாம் பகுதியில் சீனா எல்லை மீறுவது குறித்தும் இதில் விவாதம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களின் வர்த்தகம் குறித்தும் இதில் பேசப்பட்டு இருக்கிறது.

இதில் ''இந்தியா மற்றும் சீனாவின் கலாச்சாரம் எப்போதும் ஒன்றாகவே இருந்துள்ளது. இரண்டு நாடுகளின் கலாச்சாரமும் ஹரப்பா, மொஹஞ்சதரோ என்று நதி பக்கமே வளர்ந்து இருக்கிறது.இங்கு நிறைய நீர் நிலைகள் இருக்கிறது. நான் குஜராத் முதல்வராக இருந்த போது, சீனாவில் முக்கிய நீர் நிலைகளை பார்வையிட்டேன்'' என்று மோடி சீன அதிபரிடம் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து மோடி பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அதில் ''இருநாட்டு உறவு குறித்து நாங்கள் பேசினோம். இருநாட்டு உறவை வலுப்படுத்தும் காரணிகளை விவாதித்தோம். தற்போது இருக்கும் சர்வதேச அரசியலை பொருத்து இரண்டு நாடுகளும் சேர்ந்து எப்படி முன்னேற வேண்டும் என்று விவாதித்தோம்'' என்று குறிப்பிட்டார்.

English summary
Modi meets China's President Xi Jinping in Hubei Provincial Museum. They have discussed about several issues of Asia and they also discussed Doklam problem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X