For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிர்கிஸ்தானில் சீன அதிபரை சந்தித்த மோடி.. இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi Kyrgyzstan Visit -பாகிஸ்தான் பற்றி சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி

    பிஷ்கேக்: கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு சீன அதிபரான ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.

    சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான்,ரஷ்யா, கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நடைபெறுகிறது

    Modi met with Chinese President in Kyrgyzstan.. talks about improving relations between the two countries

    இம்மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், இந்த மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்து பேச இருப்பது கடந்த 10ம் தேதி உறுதி செய்யப்பட்டது

    கடந்த ஆண்டு இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் 2 மாதங்களுக்கு மேல் சீன ராவத்தினர் முகாமிட்டிருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது இதனையடுத்து அப்பகுதியில் இந்தியாவும் தனது துருப்புகளை குவித்தது

    சீனா இந்தியா இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டது அந்த சமயத்தில் மோடி சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார். பின்னர் போர் பதற்றம் தணிந்து இரு நாடுகளும் டோக்லாம் பகுதியில் தத்தம் படைகளை வாபஸ் பெற்றது நினைவிருக்கலாம்.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி சீன அதிபருடன் சந்தித்து பேச இருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கிர்கிஸ்தான் புறப்பட்டுச் சென்றார். பிரதமரின் விமானம் ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியே சென்று பிற்பகல் 2 மணிக்கு பிஷ்கேக் சென்றடைந்தது. அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. .

    பின்னர் திட்டமிடப்படி மாலை 4.50 மணியளவில் சீன அதிபர் ஜின்பிங்குடன் இந்திய பிரதமர் மோடி குழு நிலையிலான சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பின் போது இரு தலைவர்களுடனும், பல்வேறு உயரதிகாரிகள் இருந்தனர். இரு நாட்டு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.

    மேலும் இந்திய - சீன உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்த திட்டங்களை இரு நாட்டு உயரதிகாரிகள் அடங்கிய குழுவினர் தலைவர்கள் முன்னிலையில் விவாதித்தனர். இச்சந்திப்பின் போது மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான போது வாழ்த்து தெரிவித்த சீன அதிபருக்கு மோடி நேரில் நன்றி தெரிவித்தார்.

    பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை 5.30 மணிக்கும், 6.30 மணியளவில் கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும், இறுதியாக இரவு 10 மணியளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும் மோடி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரானை பிரதமர் மோடி சந்திக்க மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    English summary
    Prime Minister Modi visited the Shanghai Cooperation Conference in Kyrgyzstan, Bishkek, where he met Chinese President Jinping.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X