For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாவோஸ் உலக பொருளாதார மாநாடு.. மோடி ஆப்சென்ட்.. காரணம் லோக் சபா தேர்தல்

Google Oneindia Tamil News

டாவோஸ்:சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் இந்த முறை பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள வில்லை.

ஒவ்வொரு ஆண்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் உலக பொருளாதார மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

 Modi and minister team skips world economic meeting 2019 at davos

ஆனால் இந்த முறை அவர் அந்த மாநாட்டுக்கு செல்லவில்லை. அவர் மட்டுமல்லாது கடந்த முறை அவருடன் சென்ற அருண் ஜெட்லி, சுரேஷ் பிரபு ஆகியோரும் செல்லவில்லை. பியூஷ் கோயல், தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவில்லை.

உலக பொருளாதார மாநாட்டை காட்டிலும் இன்னும் ஒரு சில மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கிற லோக்சபா தேர்தல் காரணமாக பிரதமர் மோடி இந்த முறை டாவோஸ் நகருக்கு செல்லவில்லை. அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளார். அவரை தவிர்த்து மற்ற இரு அமைச்சர்களும்... முக்கிய அலுவல்கள் காரணமாக செல்லவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தாய்நாட்டின் சார்பாக, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், பஞ்சாப் நிதியமைச்சர் மன்பீரித் பாதல் ஆகியோர் டாவோஸ் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் தவிர நீதிஆயோக் முதன்மை செயல் அதிகாரி அமிதாப் கண்ட், ரமேஷ் அபிஷேக் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், சர்வதேச நிதியத்தின் முதன்மை பொருளாதார வல்லுநர் கிதா கோபிநாத் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். சர்வதேச அளவிலான மாநாடு என்பதால் மற்ற் நாடுகளின் தலைவர்களும் டாவோஸ் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

English summary
Prime Minister Modi and his colleagues have decided to skip this year’s annual World Economic Forum meeting at Davos, Switzerland due to loksabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X