For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மியான்மர் செல்கிறார் பிரதமர் மோடி... ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து சூச்சியுடன் பேச்சு?

By Mathi
Google Oneindia Tamil News

நேபிடா: சீனா பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மியான்மர் செல்கிறார். இப்பயணத்தின் போது ஆங் சாங் சூச்சியுடன் ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.

சீனா பயணத்தைத் தொடர்ந்து மியான்மர் தலைநகர் நேபிடா செல்கிறார் பிரதமர் மோடி. அங்கு மியான்மர் அரசின் ஆலோசகரான ஆங் சாங் சூச்சியை சந்திக்கிறார்.

Modi in Myanmar will be cautious on Rohinyga Muslim issue

சூச்சி கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் பிரதமர் மோடி. தற்போது மியான்மரில் நூற்றுக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

சுமார் 1 லட்சம் பேர் வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓடிவந்துள்ளனர். இந்தியா 40,000 பேரை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதாக கூறியது. ஆனால் ஐநா அகதிகள் ஆணையம் இதை கைவிட வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மியான்மர் சென்றுள்ள பிரதமர் மோசி சூச்சியுடன் ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சனை குறித்து விவாதிப்பார் என தெரிகிறது.

English summary
Prime Minister Narendra Modi is likely to tread the cautious path on the issue of Rohingya Muslims when he visits Myanmar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X